புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீடித்தது அமெரிக்கா
புலிகளின் சர்வதேசப் பிரிவின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் `நாடு கடந்த தமிழீழ அரசு` அமைக்கப்படுமென அறிவித்துள்ள நிலையில், புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.
புலிகள் வன்முறைகளைக் கைவிட்டமையை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான கிரேக் சுலிவான்,
மோதல்களின் முடிவின் போது மோதல் பகுதிகளிலிருந்து பொது மக்களை வெளியேறவிடாது புலிகள் தடுத்துவைத்திருந்தனர். பொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்திப் பொதுமக்களை ஆபத்துக்குள் தள்ளியிருந்தனர். இந்த உத்திகளையே கடந்த 30 வருடங்களில் அவர்கள் கையாண்டிருந்தனரெனவும் தெரிவித்தார்.
1997ஆம் ஆண்டு முதல் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட அமைப்பு எனச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் 5 வருடங்களுக்கு விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குவதில்லையெனத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment