ஈரானில் கலவரம்: இரு இலங்கையர்கள் கைது
ஈரான் ஜனாதிபதியாக அகமடி நெஜாஹ்; மீண்டும் தெரிவு செய்யப்பட்டமையில் ஊழல்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த இருவரை அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் நேற்று முந்தினம்(22) கைது செய்தனர்.
தெஹ்ரான் நகரப் பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற சம்பவங்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ஈரானிலுள்ள இலங்கைத் தூதுவர் எம்.எம். சுஹைர் கருத்துத் தெரிவிக்கையில,; இவர்கள் இருவரும் ஆர்ப்பாட்டத்திலோ அல்லது கலவரங்களிலோ ஈடுபடாத நிலையிலேயே கைது செய்யப்பட்டரெனத் தெரிவித்துள்ளளார்.
இந்த இரு இலங்கையர்களும் தாம் வசித்து வரும் பிரதேசத்தின் ஊடாக உள்ளுர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று கொண்டிருந்ததனை அவதானித்தபடி நின்று கொண்டிருக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டார்களென்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் தலைநகரான தெஹ்ரானிலும் அதன் அண்டிய பகுதிகளிலும் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வரும் கலவரங்களில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இருவார காலத்தினுள் இங்கு பத்துப் பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment