ஏ-9 வீதியினூடாக பொதுமக்கள் பஸ் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பம்?
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வுக்கு ஏ9 வீதி ஊடான பொதுமக்கள் போக்குவரத்து எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக கொழும்புத் தக வல்கள் தெரிவித்தன.
முதலில் போக்குவரத்துச் சபையின் ஐந்து பஸ்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வசதி செய்யப்படும். இந்தத் தொடரணி பாதுகாப்புப் படையினரின் வழித்துணை யுடன் இடம்பெறவுள்ளது.
பொதுமக்கள் வாகன அணியில் எத்தனை பேர் பயணம் செய்யலாம். எந்த வகையில் பயணத்தை மேற்கொள்ள பதிவுகளை மேற்கொள்ளலாம் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. விரைவில் அவை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி யாழ். நூலகத்தில் நடந்த வடக்கின் மீள் குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான செயலணியின் விசேட கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதி மன்ற நீதிபதி இ.த.விக்னராசா, படையினரின் வழித்துணையுடன் பொதுமக்களின் வாகன அணி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதில் அளித்த செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment