உயிர் அறுகும் தடை முகாம்
கழன்று விழுகிறது
கால்கள் - நமது
சோதனை சாவடிகளில்!
உச்சி வெயில்
சுட்டமணல்
இன்னும்
அணிவகுப்பாகவே இருக்கிறது
மீசை முறுக்கலுடன்
அவனின் ஆயுதம்
தொட்ர்ந்தும்
நெஞ்சை தொட்டவாறே இருக்கிறது
துயரம் சுமந்த
என்
அடையாள அட்டைக்கு
இப்போதும்
ஓய்வு இல்லை!
போவதும்
வருவதும்
அன்று போல்
இன்றும் சுமைதான்!
உயிர்
ஒவ்வொரு முறையும்
அறுந்து விழுந்தாற்போலிருக்கிறது
அரட்டல்
மிரட்டல்களால்!
உருவி எடுத்து
ஆடையையும்
கழற்றி பார்க்கும் உரிமை
யார் கொடுத்ததோ!
ஒன்றுமில்லை
எல்லாம் முடிந்துவிட்டது
சோதனை?
தேசமே!
ஒரு முறை எட்டிப்பார்
நமது
தடை முகாமை!
அபார்






0 விமர்சனங்கள்:
Post a Comment