கனடாவில் காசுகேட்டு கலகம்
லிட்டில் லியோனி
கனடாவில காசுகேட்டு முந்தி எங்களை கசக்கி எடுத்த இந்த மாவீரர்கள் இப்ப இவையளுக்குள்ள புடுங்குப்பாடு நடந்து கொண்டிருக்கிறது. என்ன நடந்திருக்கு எண்டால் சனத்தை காசுகேட்டு கலக்கி எடுத்த இவையள் கடைசிப்போர் நடத்தவேணும் யாழ்ப்பாணத்தை பிடிச்சு பலாலிக்காம்பை பிடிச்சு தமிழ்ஈழத்தை டிக்கிளையர் பண்ணப்போறம் எண்டு ஆசைவார்த்தை காட்டி உடனடியாக காசுதாங்கோ கையிலை காசு இல்லாட்டிக்கு கடன் எடுத்துத்தாங்கோ இல்லாட்டிக்கு பிறகு தமிழ்ஈழம் போக ஏலாது எண்டு பல நூற்றுக்கணக்காக ரொரன்ரோ சனத்திட்ட காசு கறந்த விசயம் சந்தைக்கு வந்திட்டுது கண்டியளோ! காசு சேர்த்தவர்கள் இப்ப சனத்திற்கு பதில் சொல்ல ஏலாமல் தலைவரின் மரணத்தை மறைச்சுக்கொண்டு திரியினம்
பெரிய பிசினஸ்காரர்ல இருந்து சாதாரண சனம்வரை இருபத்துஆயிரம் டொலரிலை இருந்து ஓரு இலட்சம் டொலர்வரை பாங்கிலை கடன் எடுத்துக் குடுத்தவையளும் வீட்டை திருப்பிமோட்கேச் செய்து காசு குடுத்தவையளும் கலங்கி நிக்கினம். இதுக்குள்ள அதிகம்மாட்டுப்பட்டது அவையின்ட ஆதரவாளர்தான் அதிகம். ஓரு இலட்சம் குடுத்த ஆதரவாளர் தனக்கு நடந்த சோகக்கதையை சொல்லேக்க காசுகேட்டு வந்த மாவீரர் என்ட வீட்டை வந்து தேத்தண்ணியையும் வாங்கி குடிச்சுக்கொண்டு தலைவரின்ட பிளேன் கனக்க விளையாட்டு காட்டப்போகுது வெகுவிரைவில தமிழீழ விமானநிலையமான பலாலி விமானநிலையத்தில நீங்கள் போய் இறங்கலாம். தமிழீழம் பிடிச்ச உடனேயே காசைதிருப்பி வட்டியோடு தருவம் எண்டு காதில பூச்சுத்திவிட்டினம் எண்டு இப்பதான் அவருக்கு விளங்கியிருக்குது அதுமட்டுமில்லை இவர் ரொரன்ரோவில நடந்த அத்தனை போராட்டத்திற்கும் குடும்பத்தோட போய் (ஸ்டொப் த வோர்) (ஸ்டொப் த வோர்) சண்டையை நிற்பாட்டு சண்டையை நிற்பாட்டு எண்டு கத்தினது இப்பத்தான் தெரியுது. தலைவருக்கு ஏதும் நடந்தா குடுத்தகாசும் அல்லோ திரும்பிவராது எண்டுதான் இவையள் போராட்டத்திற்கு ஒடி ஒடி போயிருக்கினம் எண்டு எனக்கு இப்ப கிளிக் பண்ணுது
இப்ப இந்தப்பிரமுகர் பப்ளிக்காக புலம்ப வெளிக்கிட்டுட்டார் என்ரை லோன் காசை திருப்பித்தராட்டிக்கு வீண் பிரச்சினை வரும் எண்டு கண்டபடி அந்தப்புலிப்பிரமுகரை திட்டிதீர்க்கிறார் பொலீஸ்காரரிடமும் போய் கொம்பிளைன் குடுக்க ஏலாது. இவர் இனி அப்பிடியெண்டால் அவையின்ட புலீஸ்காரரிட்டைதான் காலிலை விழுந்தாவது கடன்காசை வாங்கவேணும்.
இன்னொரு விசயமும் இந்த லிட்டில் லியோனிக்கு விளங்கிப்போச்சுது போனகிழமை எல்லாரையும் கறுப்புச்சட்டைபோட்டுக்கொண்டு மெழுகுதிரியும் கொண்டுவரச்சொல்லி அறிவிச்சினம் தலைவரின்ட மரணத்தை அதிலை வைச்சு அறிவிக்கப்போகினம் எண்டு அரசல்புரசலாக அவையிலுக்குள்ளாள இருந்து கதை வந்தது ஆனால் கடைசிநேரத்திலை அவையளுக்குள்ள வாக்குவாதங்கள் வந்து அந்த அறிவிப்பை வெற்றிகரமாக விற்றோபண்ணிப்போட்டினம்.
அடுத்தநாள் தலைவர் (கே.பி) பத்மநாதன் பி.பி.சி றேடியோவிலை தலைவர் வீரமரணம் அடைஞ்சிட்டார் எண்டு அறிவிச்ச உடனேயே தலைவரின்ட ஊரான வல்வெட்டித்துறை மக்கள் உடனடியாக றெக்ஸ்டேலில் உள்ள மண்டபத்தில் ஒன்றுகூடச்சொல்லி ஊடகங்களிலை அறிவிச்சவையள். அங்கை அஞ்சலி செலுத்த சனம் கூட அங்கையும் அந்த குரூப் ஆட்கள் வந்து அஞ்சலி செய்யவேண்டாம் எண்டு சொல்லி தடுத்துப்போட்டினம். பின்னர் வாக்குவாதம் புலீஸ் ஆக்களுக்குள்ள வர மண்டபக்காரர் பொலீஸ்சை அழைக்கவேண்டி வந்ததாம்.
தலைவர் உசிரோடு இருக்கிறார் எண்டு காலத்தை கடத்தினால்தான் கடனாக காசுகுடுத்தவர்கள் கரைச்சல் தரமாட்டார்கள் எண்டதாலையும் இன்னும் சனத்தை பேய்க்காட்டி காசைசேர்க்கலாம் எண்டும் ஆர்பாட்டங்களுக்கு சனத்தை றோட்டிலை இறக்கலாம் எண்டபடியாலும் மரணத்தை அமத்தி வைச்சிருக்கினம். அப்பிடியெண்டால் இந்தமுறை மாவீரர் தினத்திற்கு என்னண்டு தலைவரின்ட உரையை வாசிக்கப்போகினம். நக்கீரன் பேப்பர்காரர் தலைவர் உயிரோடு இருக்கிறார் எண்டு பழைய படத்தை வெட்டி ஓட்டி ஈழத்தமிழன் இளிச்சவாயன் ஏமாத்தலாம் எண்டு கடைசியாக மூக்குஉடைபட்டு மாட்டுப்பட்டதுபோல போல இனிச்செய்யமாட்டினம். தமிழ்நாட்டிலை தலைவரின் குரலை ஒத்த(மிமிக்கிரி) எவரையாவது கண்டுபிடிச்சு மாவீரர் தினத்திற்கு வாசிச்சுப்போட்டு தமிழ் மக்களை ஏமாத்த ஐடியாபோடுவினம். அல்லது பழைய மாவீரர் உரைகளை வெட்டி ஒட்டி தமிழ் மக்களை சீட்டிங் செய்வினம். புலிகளின் வெளிநாட்டுத்தலைவர் (கே.பி) பத்மநாதன் ரொரன்ரோவில் உள்ள தமிழ் வானொலியான (சி.ரி.பி.சி) இளையபாரதியின் வானொலிக்கு அளித்த செவ்வியில் கூட தலைவர் பிரபாகரனின் மரணத்தைபற்றி நெடுமாறன் அவர்களோடு கதைத்தபோது அவர் கூறினாராம் எல்லாத்தையும் கையில் எடுத்துக்கொண்டு ஓரு நிர்வாகத்தை ஏற்படுத்திவிட்டு மரணத்தை அறிவிக்கும்படி என்னிடம் கூறினார் என பத்மநாதன் கூறினார். ஆனால் நெடுமாறனோ தனது நலனுக்காக இப்போது பிரபாகரன் இறக்கவில்லை என பல்டி அடிக்கிறார்
பாவம் தலைவர் அவர் இறந்தும்கூட அஞ்சலி செய்ய ஆக்கள் இல்லை கனடாவில் அவரை கடவுளின் அவதாரமாக ஆக்கி மணிமேக் பண்ணியவர்களும் மக்கள் பணத்தில் வியாபாரம் நடாத்தும் புடவைக்கடையான ஏசியன் ரெக்ஸ்ரைலும் பாபுகேற்றரிங்கும் நியூஸ்பைஸ்லான்டும் ரெஜினோஸ் பீட்சாவும் எஸ்.பி இன்போட்டசும் கொலம்பியா வீடியோவும் உங்கள் சொத்துக்களை விற்று மக்களிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பிக்கொடுத்து தலைவனின் மரணத்தை அறிவித்து அஞ்சலி செலுத்துங்கள் பாவம் தலைவா
தேணி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment