மொரட்டுவையில் தனியார் வங்கியில் கொள்ளை;ஒருவர் பலி
மொரட்டுவ ரவத்தவத்தை பகுதியிலுள்ள தனியார் வக்கியொன்றில் இன்று கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.வங்கிக்கு வந்த இரு கொள்ளைக்காரர்கள் 1.7 மில்லியன் ரூபா கொள்ளையடித்துள்ளதாவும் ,இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர் வங்கியில் பணம் வைப்புச் செய்ய வந்த வாகன சாரதியொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment