கிழக்கில் மீன் பிடிக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது !!
கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நாளை (15) முதல் நீக்கப்படவுள்ளது. இதன்படி நாளை முதல் கிழக்கு மாகாண மீளவர்கள் எவ்வித நேரக் கட்டுப்பாடுமின்றி கடலில் மீன் பிடிக்க முடியும். இந்தத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ வெளியிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். திருகோணமலை மீனவத்துறைமுகத்தில் இடம்பெற்ற வைபவத்திலேயே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.இதன்படி கடந்த பத்து வருடங்களாகவிருந்து வந்த இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment