யுத்தத்தின் இறுதி மூன்று நாட்களில் நான்கு TNA நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரபாகரன் அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளார் ‐ அரசாங்கம்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது இறுதி மூன்று நாட்களில் செய்மதி தொலைபேசி ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4பேருக்கு பல தடவைகள் அழைப்புகளை மேற்கொண்டு பேசியுள்ளமை தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதி மூன்று நாட்களில் இந்தியா, மலேசியா, சிங்கபூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர். இந்த உறுப்பினர்கள் இலங்கை திருப்பிச் செல்ல முடியாமல் அந்த நாடுகளில் தங்கியிருப்பதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
போரை நிறுத்த சர்வதேச ரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்துமாறு பிரபாகரன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் பிரபாகரன் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொண்ட சர்வதேச அழைப்பு பட்டியலில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரபலமான பிரமுகர் ஒருவரும் அடங்குவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார். மே 17 ஆம் திகதி முள்ளியவாய்க்கல் பகுதியில் இரண்டு செய்மதி தொலைபேசிகள் இயங்கியுள்ளன. இதில் ஒரு தொலைபேசி சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு உரியது என கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment