யாழ்-கொழும்பு பயணம்: பேரூந்துகள் தயார்
பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்படன் அடுத்தவாரம் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்கப்படலாமெனத் தெரியவருகிறது.
இதற்கென 5 பேரூந்துகள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின்கீழ் 4.3 மில்லியன் ரூபா பெறுமதியான பேரூந்து உபகரணங்களையும், 5 பேரூந்துகளையும் பசில் ராஜபக்ஷ யாழ் போக்குவரத்து சபையினரிடம் கையளித்தார். உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு உயர்பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையில் போக்குவரத்து சேவைகளை வழங்க 10 பேரூந்துகள் தயாராகவிருப்பதாக யாழ் போக்குவரத்துச் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், யாழ்-கொழும்பிற்கிடையில் 86 பேரூந்துகளைப் பணியில் ஈடுபடுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பேரூந்துகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் அடுத்தவாரம் ஏ-9 வீதியூடான பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment