பாராளுமன்ற உறுப்பினராகிறார் கோதபாய?
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதுவதாகத் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதாக தொழில்துறை அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்.
இராஜினாமாச் செய்வது என்ற தனது முடிவை ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளபோதும், இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென அமைச்சர் கூறினார்.
தனது கடமையை நாட்டுக்குச் செய்வதற்கு இதுவொரு சிறந்தவழி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் முக்கிய பங்காற்றியிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்ளுவாரா என்பது தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் மற்றுமொரு சகோதரருமான பசில் ராஜபக்ஷவும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குச் சென்றிருந்ததுடன், அரசியல் ரீதியான விடயங்களை அவர் கையாண்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment