புதிய பாதையில் புதிய தலைமை
இலங்கை சுதந்திரமடைந்து அறுபது வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் இலங்கைத் தமிழ் மக்க ளுக்குப் புதிய தலைமை தேவை என்ற கோரி க்கை எழுந்திருப்பது மிகவும் துரதிஷ்டமா னது.
சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் செயலூக்க முள்ள அரசியல் தலைமைகள் இருக்கின்ற அதேவேளை இலங்கைத் தமிழர்கள் மாத் திரம் தலைமை இல்லாதவர்கள் என்ற நிலை க்குத் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய விடயம். கடந்த காலங்களில் இம்மக்களுக் குத் தலைமை தாங்கியவர்கள் மகா புத்தி சாலிகள் எனக் கருதப்பட்டார்கள்.
பேராசி ரியர் சுந்தரலிங்கம், ஜீ. ஜீ. பொன்னம் பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், கு. வன்னியசிங்கம், அ. அமிர்தலிங்கம், இரா. சம்பந்தன் என இப்பட்டியல் நீள்கின்றது. மெத்தப்படித்த இந்தத் ‘தங்க மூளைகள்’ ஆறு தசாப்தங்களாக நடத்திய அரசியலின் விளைவாக மக்கள் இன்று தலைமை இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின் றார்களென்றால் அத் தலைமையின் செயற் பாட்டிலுள்ள அடிப்படையான தவறுதான் அதற்குக் காரணமாக முடியும்.
இன்று தமிழ் மக்கள் புதிய தலை மையை நாடி நிற்கின்ற நிலையில் பழைய தலைமையின் தவறுகளை இனங்காண வேண்டியது மிகவும் அவசியமானது. இத் தலைவர்கள் இன ஐக்கியத்துக்கு முக்கியத் துவம் அளித்துச் செயற்படவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள விரோத உணர் வைத் தூண்டும் வகையிலேயே இவர்க ளின் அரசியல் பிரசார செயற்பாடுகள் அமை ந்திருந்தன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இத் தலைவர்கள் மேற்கொண்ட முடிவு களை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், தென் னிலங்கையிலுள்ள முற்போக்கு சக்திகளுக் கும் தமிழ் மக்களுக்குமிடையே ஐக்கிய மும் புரிந்துணர்வும் ஏற்படுவதைத் தவிர்ப் பது இவர்களின் பிரதான நோக்கமாக இரு ந்ததை உணர முடியும். இந்த நோக்கத்துக் காகவே யதார்த்தத்துக்கு முரணான கோரி க்கைகளை முன்வைத்தார்கள். வட்டுக்கோ ட்டையில் தனிநாட்டுத் தீர்மானம் நிறை வேற்றியமை இந்த நடைமுறையின் உச்ச கட்டம் எனலாம்.
இத்தீர்மானத்தை நிறை வேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி அத் தீர்மானத்தின் மை காய்வதற்கு முன்னரே ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மாவட்ட சபை திட்டத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து சுய அரசியல் நோக்கத்துக்காகவே தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் என்ப தைப் புரிந்துகொள்ள முடியும்.
சுய அரசி யல் நோக்கத்துக்காக இவர்கள் நிறைவேற் றிய தனிநாட்டுத் தீர்மானம் இளம் சந்ததி யினரைத் தவறாக வழிநடத்தி இன்று தமிழ் மக்கள் அனைவரையும் அவல நிலைக்குத் தள்ளியிருப்பதைக் கண்கூடாகக் காண்கி றோம்.
ஒரு இனத்தின் அரசியல் தலைமை மக்க ளின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை வகி த்தவர்கள் தங்கள் அரசியல் இருப்புக்கும் வர்க்க நலனுக்கும் முன்னுரிமை அளித்தார் களேயொழிய மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. காலத்துக்குக் காலம் மக் களின் இன உணர்வுகளைத் தூண்டிவிட்டுத் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டார் கள். இதன் விளைவுதான் தமிழ் மக்களின் இன்றைய அவலநிலை.
இன்றைய நிலையில் தமிழ் மக்களின் விமோசனம் புதிய பாதையில் அவர்கள் பயணிப்பதிலேயே தங்கியுள்ளது. அதற்குப் புதிய தலைமை தேவை. அத் தலைமை இன ஐக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்பத ற்கும் இன, மத பேதமின்றிச் சகல முற் போக்கு சக்திகளுடனும் புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் ஐக்கிய இலங்கைக் கோட் பாட்டில் அசையாத நம்பிக்கையுடன் செய ற்படுவதற்கும் தன்னை முழுமையாக அர்ப் பணித்துள்ளதாக இருத்தல் வேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment