இலங்கைத் தமிழர் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: கனடா
இலங்கைக்குச் செல்ல கனேடியப் நாடாளுமன்றச் செயலாளர் தீபக் ஒப்ராலுக்கு வீஸா வழங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தபோதிலும், இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் தமிழர்களுக்கான புனர்நிர்மானப் பணிகளைத் தொடரப்போவதாகக் கடனா அறிவித்துள்ளது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடிய நாடாளுமன்றச் செயலாளரான தீபக் ஒப்ராய் இலங்கைக்கு வருவதற்கான வீசா அனுமதியை வழங்க கனடிhவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
“எனக்கு வீஸா மறுக்கப்பட்டுள்ளபோதும், இலங்கையர்களுக்கும், தமிழர்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நான் பாடுபடுவேன்;” என்றார் தீபக் ஒப்ராய்.
இலங்கைக்கு வருவதற்கு வீசா மறுக்கப்பட்ட இரண்டாவது கனேடியப் பாராளுமன்ற உறுப்பினராக ஒப்ராய் கருதப்படுகிறார். கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து கனடாக்குத் திருப்பியனுப்பப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே ஒப்ராய்க்கான வீசா அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
“இலங்கை பொப்ரேயை நாடு கடத்தியுள்ளது, இந்தத் தருணத்தில் எனக்கான வசதிகளைச் செய்துகொடுக்கமுடியாதென்ற சிறிய காரணத்துக்காக எனது வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது” என தீபக் ஒப்ராய் குறிப்பிட்டார்.
“பொப்ரே மற்றும் எனது வீஸா அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் இலங்கை தொடர்பான கடனாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. மீள்கட்டுமானப் பணிகளில் நாங்கள் அவர்களுடன் இணைந்துகொள்வோம்” என்றார் ஒப்ராய்
மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென கனடா அரசாங்கம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியிருப்பதாகவும் தீபக் ஒப்ராய் குறிப்பிட்டார்.
“இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்பிலும்; கவனம் செலுத்திவருகிறோம், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் எரிச்சலூட்டும் செயல்களை அகற்றவேண்டுமென்பதே தமக்குத் தேவை” என்றார் ஒப்ராய்.






0 விமர்சனங்கள்:
Post a Comment