வைக்கோலில் தயாரிக்கப்பட்ட எரிபொருள் மூலம் வாகனங்களை இயக்கி சாதனை
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைக்கோல் மூலம் தயாரிக்கப்பட்ட எரிபொருள் மூலம் தமது வாகனங்களைச் செலுத்திப் பரீட்சித்துப் பார்த்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் அதுல பெரேரா குழுவினர் வைக்கோல் மூலம் பெற்றோல் போன்ற எரிபொருளைத் தயாரித்துள்ளனர். எரிபொருளை லீற்றர் 25 ரூபா என்ற அடிப்படையில் விற்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உற்பத்தியாகும் மொத்த வைக்கோலில் 25 வீத வைக்கோலை பயன்படுத்தி இலங்கைக்கு தேவையான எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்பதோடு, எண்ணெய் எடுக்கப்பட்ட வைக்கோலினை கால் நடைகளுக்கு உணவாக வழங்கவும் முடியும். மேலும், இந்த எண்ணெயை பயன்படுத்துவதற்காக வாகன எஞ்சின்களை மாற்றத் தேவையில்லை. பெற்றோல் எஞ்சின்களில் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். பெற்றோலுடன் கலந்தும் பயன்படுத்தலாம் இதிலிருந்து வெளியேறும் புகையினால் எவ்வித சூழல் பாதிப்பும் ஏற்படாது.
இந்த எரிபொருள் உற்பத்தி மூலம் வடகிழக்கு மாகாணமும் அம்பாந்தோட்டை போன்ற நெல் அதிகம் உற்பத்தி செய்யும் மாகாணங்களும் தமது வைக்கோல் மூலம் பயனடைய முடியுமென பேராசிரியர் அதுல பெரேரா தெரிவித்ததையடுத்தே பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முதலில் வேறு மோட்டார்களை பயன்படுத்தி பரீட்சித்ததன்பின் வாகனங்களை பரீட்சிக்கின்றனர்.
பேராசிரியர் அதுல பெரேரா தலைமையிலான விவசாய பீட பட்டபின்படிப்பு நிறுவனத்தைச் சார்ந்த குழுவினர் இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தியதோடு இந்த எண்ணெய் மூலம் வாகனங்களை இயக்கியும் காட்டினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment