அம்பாறையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை : இரு விடுதலைப் புலிகள் பலி
அம்பாறை மாவட்டம் குடும்பிக் குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகளின் போது நேற்று மாலை 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது.
விடுதலைப் புலிகளின் மறைவிடமொன்றைச் சுற்றி வளைத்த போது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் பதில் தாக்குதலிலேயே குறிப்பிட்ட இருவரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோதலின் பின்பு அந்தப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது கொல்லப்டப்ட இருவரின் சடலங்களுடன் ரி 56 ரக துப்பாக்கி - 01 அதற்கான ரவைகள் மற்றும் மகசீன்களுடன், கைக்குண்டுகள் - 03 விடுதலைப் புலிகளின் சீருடை - 01 மற்றும் ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் மட்டக்களப்பு உன்னிச்சை காட்டுப் பகுதியிலுள்ள மறைவிடமொன்றிலிருந்து நேற்று மாலை விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தலா 2 கிலோ எடையுடடைய கிளேமோர் குண்டுகள் - 05, ரி 56 துப்பாக்கி -01,கைக்குண்டுகள் - 10, ஆர்.பி.ஜி. குண்டு - 01 மற்றும் ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment