எய்தவர் விழுந்திருக்கிறார்...!
இறந்து கிடப்பது மனித உடல்களெனும்போது
மனது எப்படி படபடக்கிறது
ஆனால் மனமென்றெதுவுமில்லாமல்
இவர்கள் செய்தவை?
அதுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு
வாய்க்குள் வெடிவைத்ததையும் -
அப்பாவிகளையும், அறிவாளிகளையும்
வெறும் சந்தேகமென்றபேரில் புதைத்து
முடித்தார்கள்; அன்று!
அம்புகளாய்
இருந்தவர் விழுந்தார் இன்று!
எய்தவர் விழுந்திருக்கிறார்
அவ்வளவு தான்
- கலைமதி
0 விமர்சனங்கள்:
Post a Comment