வடக்கை நோக்கிப் படையெடுக்கும் வங்கிகள்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வடபகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் தமது சேவைகளை விஸ்தரிப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளும், விசேட வங்கிகளும் வடமாகாணத்தில் தமது கிளைகளைத் திறப்பதற்கான அனுமதியை நாடியுள்ளன. கடந்த மூன்று வாரங்களில் மத்திய வங்கி வடமாகாணத்தில் 67 புதிய வங்கிகள் அமைப்பதற்கு அனுமதிகளை வழங்கியுள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறையே பெரும் எண்ணிக்கையான வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வடபகுதியை நோக்கி வங்கிகள் விஸ்தரிக்கப்படுகின்றமை மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பெரும் உதவியாகவிருக்குமென அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.
வடபகுதியில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் சிறிய நிதித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் மத்திய வங்கி ஆலோசித்திருப்பதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, வர்த்தக நிறுவனங்கள் பல தமது சேவைகளை வடக்கிற்கு விஸ்தரிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment