இழப்புக்களின் எண்ணிக்கையை ஐ.நா. மறைக்கவில்லை
இலங்கையில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மறைக்கவில்லையென ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை மறைப்பதற்கு ஐ.நா. முயற்சிப்பதாக பிரான்ஸ் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்தச் செய்தியை மறுத்திருக்கும் பான்கீ மூன், அவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மறைக்கவில்லையெனக் கூறியுள்ளார்.
“நான் இதனை மறுக்கிறேன். எந்தவொரு எண்ணிக்கையையும் குறைப்பதற்கு ஐ.நா. முயற்சிக்கவில்லை. மோதல்களில் ஏற்பட்ட இழப்புக்களின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அதிகளவு எண்ணிக்கையான இழப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையல்ல” என்றார் அவர்.
அதேநேரம், இலங்கை மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாது என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.
“இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவிருக்கலாம் அல்லது குறைவாகவிருக்கலாம். துல்லியமான தகவலைக் கூறமுடியாதுள்ளது. விசாரணை நடத்துவதே சிறந்தது என நாம் கூறுகிறோம்” என்றார் அவர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment