கிழக்கு மாகாணக் கட்டடங்களிலும், சில கிராமங்களுக்கும் புலிப்பயங்கரவாதிகளின் பெயர்கள், உடன் அகற்றுமாறு உத்தரவு
மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டைபறிச்சான் என்னும் கிராமத்திற்கு பல நூறு கொலைகளுக்குப் பொறுப்பாளராக மூதூர் பிரதேசத்தில் செயற்பட்ட புலிகளின் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரான கணேஸ் என்பவரின் ஞாபகாாத்தமாக கணேசபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது விடயத்தில் உள்ளுராட்சி அமைச்சு உடனடிக் கவனம் செலுத்தி அக்கிராமத்தின் பெயரை ஏற்கனவே அழைத்தவாறு கட்டைபறிச்சான என அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென நாம் நினைவூட்டுகின்றோம்.
அத்துடன் கிழக்குமாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் பெயர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யூ.கே. வீரவர்தனா சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்
“இதனை அமுல்படுத்த தவறும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் தெரிவித்துள்ளார். ‘பாடசாலை மற்றும் கட்டிடங்களுக்கு தனி நபர் பெயர் சூட்டப்படல்’என்னும் தலைப்பிலான அந்த சுற்றறிக்கையில் கடந்த காலங்களில் அரசாங்க பாடசாலைக் கட்டிடங்களுக்கு பயங்கரவாத அமைப்பின் பிரதேச தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை அண்மையில் மூதூர் மற்றும் சம்பூர் பிரதேச பாடசாலைகளுக்கு சென்றிருந்த போது அவதானிக்க முடிந்தது.
பாடசாலைகள் ஆரம்பத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டதோ அந்த பெயரே அமுல் படுத்தப்பட வேண்டும். பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இருந்த பெயர், வலயம் மற்றும் தற்போதைய பெயர் ஆகிய விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.ஒரு பாடசாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடனும் மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடனும் எனது அனுமதிக்காக முன்வைக்கப்பட வேண்டும்.
பிரதேச பயங்கரவாத தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும். வலய கல்விப் பணிப்பாளர்கள் மேற்பார்வை செய்து இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இந்தத் தவறை திருத்தம் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் எனக்கு அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 விமர்சனங்கள்:
Post a Comment