கெப்டன் அலி இலங்கைவர அனுமதியில்லை! நிவாரண பொருட்கள் மாத்திரம் இலங்கைவரும்!
‘கெப்டன் அலி’ கப்பலை மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கும் உத்தேசம் இல்லை எனவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
‘கெப்டன் அலி’ கப்பலில் உள்ள நிவாரண பொருட்கள் இந்தியாவில் தரையிறக்கப்பட்டு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக மீண்டும் ‘கெப்டன் அலி’ கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்கும் திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய தொலைபேசி செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீளக் குடியமர்த்த இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மக்களது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment