கட்டைக்காடு பகுதியில் பெரும் தொகையான ஜி.பி.எஸ் மற்றும் செய்மதி தொலைபேசிகள் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு (பட இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை – கட்டைக்காடு பகுதியில், இரகசிய தகவலொன்றையடுத்து, ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஜி.பி.எஸ் மற்றும் செய்மதி தொலைபேசிகள், அவற்றுக்கான சிம் கார்டுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனை மரம் ஒன்றின் மீது இவைகள் இரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அங்கு சென்ற வவுனியா பொலிசார் இவற்றைக் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் 39, செய்மதி தொலைபேசிகள் 12, அவற்றுக்கான சிம் கார்டுகள் 13, கொம்பாஸ் 44, தொலைநோக்கி கண்ணாடிகள் 06, தோட்டாக்கள் 14 என்பனவே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுக்கே, வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குணவர்தன, வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ரண்மல் கொடித்துவக்கு ஆகியோரின் வழிகாட்டல் உத்தரவுகளின் பேரில் வவுனியா மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸார் 59 ஆம் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவின் ஒத்துழைப்போடு இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment