வட கொரியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தனது அணு ஆயுதங்களையும், நீண்ட தூர ஏவுகணைகளையும் சமீபத்தில் சோதனை செய்தது.
இதைத்தொடர்ந்து வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் தென்கொரிய அதிபர் லீ மியுங்க் பக்கைச் சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஓபாமா,
"உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தனது அணு ஆயுத கொள்கைகளை வடகொரியா மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அது கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment