கே.பி.யின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கனவுலகத்திலேயே நாம் மட்டுப்படுத்துவோம்
புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கற்பனையை கனவுலகத்திலேயே மட்டுப்படுத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment