புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் !
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் எமது தமிழர்களின் வாழ்வில் இன்னும் விடியல் ஏற்ப்படவில்லை பயங்கரவாதத்திக்கெதிரான யுத்தத்தில் பாதிப்புற்று இன்று அகதிமுகாம்களில் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தனது உறவுகளை பிரிந்து சிதறிக்கிடக்கின்றனர். முப்பது வருடங்களாக தங்களது பிள்ளைகளை போரில் பறிகொடுத்துவிட்டு இன்று அனாதைகளாக அகதி முகாம்களில் ஆதரவின்றி தனிமரமாக நிக்கின்றனர்.
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று அன்று எந்த மக்களுக்காக ஆயுதம் தூக்கினாரோ இன்று அதே மக்களுக்காக அதிகாரமிக்க தமிழ் அமைச்சர் என்ற வகையில் தமிழ் இரத்த உறவுகளுக்காக மீண்டும் வன்னி மண்னில் கால் பதித்துள்ள கருணா அம்மான் தொடர்ந்தும் தமது மக்கள் அகதி வாழ்கை வாழக்கூடாது அவர்களை எப்படியாவது வெளியில் கொண்டுவந்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற ஓரே எண்னத்துக்காக போட்டிமிக்க அரசியலில் தமிழ் மக்களுக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தங்களின் சுயநலத்துக்காக சிறிய குழுக்கள் உறவினர்களை அகதி முகாம்களில் இருந்து வெளியேற்றி தருவதாக கூறி புலம்பெயர் தமிழர்களிடமும் மற்றவர்களிடமும் பெருந்தொகையான பணத்தை பெற்றுவருகின்றர். இவர்கள் சட்டத்திக்கு புறம்பான செயல்களை செய்து உங்களின் உறவினர்களை மீட்த்தருவார்களாயின் அது உங்களுக்கு பாதுகாப்பு ரீதியான பாதிப்பை ஏற்ப்படுத்தும் ஆகவே உறவுகளே சற்று சிந்தித்து செயற்படுங்கள்.
உங்களின் உறவினர்களை மீட்டுத்தருவதற்காகவே இன்று அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இதன் முதல் கட்டமாக வவுனியா அகதிமுகாம்களில் இருக்கும் கிழக்கு மக்கள் சட்டரீதியாக கருணா அம்மான் அவர்களினால் அழைத்து வரப்படுவார்கள் இரண்டாம் கட்டமாக வன்னி மக்கள் சட்டரீதியாக தங்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தபடுவார்கள் என்பது உறுதி ஆகவே தமிழ் உறவுகளே புலம்பெயர் தமிழர்களே சற்றுப் பொறுங்கள் உங்களின் உறவினர்கள் உங்களிடம் சேர்க்கப்படுவார்கள்… அன்றும் இன்றும் என்றும் கருணா அம்மான் தமிழ் மக்களுடன்..
யூலியன் ஞானப்பிரகாசம்
ஊடக செயலாளர்
தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சு.






0 விமர்சனங்கள்:
Post a Comment