அரசுடன் நெருங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டப் பின் விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் துணையை நாடியிருப்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.
வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதன் அண்மைக் காலமாக அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் களைகட்டியுள்ளன.
காங்கேசந்துறை நோக்கி செல்லவிருக்கும் யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் வவுனியாவில் இருந்து தாண்டிகுளம் வரையான யாழ்தேவி வெள்ளோட்ட நிகழ்வில் அரசதரப்பு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுபிப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா அமைச்சர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதனும் சேர்ந்து தாண்டிக்குளத்தில் புகையிரதத்தை வரவேற்று நிகழ்ச்சி யொன்றினையும் நடாத்தினர், அதில் அதிதியாகக் கலந்து கொண்டு கிஷோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
தாண்டிக்குளத்தில் யாழ்தேவி புகையிரத வரவேற்பைத் தொடர்ந்து ஓமந்தையில் புதிய புகையிரத நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது, இவ் அனைத்து நிகழ்வுகளிலும் திரு.கிஷோர் கலந்து கொண்டார்.
இன்று (09.06.2009) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதற்கு ஆதரவாக 105 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன, ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் எட்டுப் பேர் கலந்து கொண்ட போதிலும் ஏழு பேரே எதிர்த்து வாக்களித்துள்ளனர், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கிஷோர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளார்.
இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது அரசாங்கத்துடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கிஷோர் செயற்படுவது புலனாகின்றது, எது எப்படியாகினும் விரைவில் அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
- ஈழவன் (களத்துமேடு)
0 விமர்சனங்கள்:
Post a Comment