யாழ் குடாநாட்டில் `ஒளிந்திருக்கும்` புலிகள் கப்பம் கேட்டு தொல்லை
வன்னியில் புலிகளின் தலைமை பூண்டோடு போன பின்பு, பெரும் பண நெருக்கடியில் சிக்கியுள்ள யாழ். குடாநாட்டில் இன்னும் `ஒளித்திருக்கும்` புலிகளும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சில தனிநபர்களும் யாழ் குடாநாட்டில் கப்பம் கேட்டு மக்களை மிரட்டும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
தென்மராட்சியில் புலிகளின் `ஒட்டுக்குழு`வாக சேர்ந்தியங்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சில தனிநபர்கள் `கப்பம்` கேட்டு மிரட்டியதால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி விடத்தல்பளையில் வசித்துவரும் `கார்` உரிமையாளர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரடங்கு அமுலில் உள்ள இரவு வேளையில் இவரின் வீட்டுக்குச் சென்ற மேற்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சில நபர்கள் துப்பாக்கி முனையில் 50 இலட்சம் ரூபா பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
கப்பப் பணத்திற்கு கால அவகாசம் வழங்கிய புலிகளின் `துணைப்படை`யாக சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அந்நபர்கள், குடும்பத்துடன் கொலை செய்யப்படுவீர்கள் எனவும் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
யாழ். குடாநாட்டில் `ஒளித்திருக்கும்` புலிகள் சகல வன்முறைகளையும் கைவிட்டு படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதேவேளை `ஒளித்திருக்கும்` புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வேறு ஏதேனும் வசதிகளை கொடுத்து உதவுவது சட்டரீதியான மாபெரும் தவறு என்றும் தலைமறைவாக உள்ள புலிகள் படையினரிடம் சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் யாழ். இராணுவத் தளபதி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
யாழ். மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைக்க `ஒளித்திருக்கும்` புலிகளுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் உட்பட வேறு தேவைகளை நிறைவேற்ற உதவுவது தவறென பொதுமக்களுக்கு அறியத்தருவதுடன் அவர்கள் உங்களின் உறவாக அல்லது நணர்பர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்வுக்கான பாதுகாப்பையும் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தேவையான செயற்பாடுகளை தயவுசெய்து உடன் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment