பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? - துக்ளக்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை இலங்
கை அரசு உறுதி செய்துள்ளது. அது சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும்
வெளியிட்டுள்ளனர். இந்தச் செய்தியும் புகைப்படங்களும் பத்திரிகைகள்
தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்
டில் உள்ள சிலருக்க மட்டும் அவர் இன்னும் இறக்கவில்லை.
ஹிந்து பத்திரிகை கூட பிரபாகரன் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று
தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டது. பழ.நெடுமாறன்,வைகோ, நல்லகண்ணு,
ராமதாஸ் போன்றோர் 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற
அமைப்பை நடத்துகின்றனர். இதன் ஒருங்கிணைப்பாளரான பழ.நெடுமாறன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் 'பிரபாகரன் இறக்கவில்லை. நலமாக இருக்
கிறார்" என்று கூறியுள்ளார்.
பொதுவாகவே, ரயில் விபத்துகள், துப்பாக்கிச் சூடுகள் போன்ற அசம்
பாவிதச் சம்பவங்கள், துர்மரணங்களின் போது, அரசு தரப்பில் வெளியிடப்
படுகிற சாவு எண்ணிக்கையை, சாதாரண மனித மனம் ஏற்றுக்கொள்ளாது.
ஆக்ஸிடென்ட்லே இறந்தது நிறையப் பேர் இருக்கும். ஜனங்க அதிர்ச்சி
அடைஞ்சிருவாங்கன்னு எண்ணிக்கையைக் குறைச்சு சொல்றாங்க" என்று
சில நாட்களுக்குப் பேசிக்கொண்டிருபார்கள்.
இதே போல, துப்பாக்கிச் சூடுகளின் போது 'குண்டடிபட்டுச் செத்தவங்க
நிறையப் பேர் இருப்பாங்க. பொலீஸ் எல்லாத்தையும் மறைச்சிட்டுது என்பார்
கள். கும்பகோணத்தில் நடந்த பள்ளிக்கூடத் தீ விபத்தில் கூட, ஊடகத்தில்
வெளியான சாவு எண்ணிக்கையைப் பலர் நம்பவில்லை. இது மனித
சுபாவம். இதுபோன்ற துர் மரணங்களின்போது வெளியாகும் தகவல்களை
ஜனங்கள் எளிதில் நம்புவதில்லை.
பிரபாகரன் வி~யத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. அதுவும் அவர்
தமிழக அரசியல் தலைவர்களால் மாவீரராக மதிக்கப்பட்டவர்;: படுபவர்.
மேலும் இலங்கையிலேயே பல சிங்களத் தலைவர்களையும் அமிர்தலிங்கம்
போன்ற தமிழர் தலைவர்களையும், ராஜீவ் காந்தியையும் கொன்ற இயக்கத்
தின் தலைவர்.
அப்படிப்பட்ட இயக்கத்தின் தலைவர், 'கூலி உயர்வு கேட்டான் அத்தான்,
குண்டடிபட்டுச் செத்தான்" என்ற ரீதியில் சர்வ சாதாரணமாக இறந்து
போவதாவது? இதை எப்படி நம்புவது? இதுதான் சிலரது தர்மசங்கடம்.
இந்தப் பாமரத்தனமான அபிப்ராயத்தையொட்டி தமிழ்நாட்டிலுள்ள சில பத்
திரிகைகளும் 'பிரபாகரன் இறக்கவில்லை" என்று செய்திகளைத் தயாரித்து
சுடச்சுட விற்று லாபம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. வீரப்பன் இறந்
தபோதும் இதுபோன்று பல யூகக்கதைகள் வண்டி வண்டியாகப் பேசப்பட்
டன. ஏனென்றால் 'வீரப்பன் மாவீரன். கொல்லப்பட முடியாதவன். அவனைப்
பிடிக்கவே முடியாதபோது, கொல்வது என்பது எளிதா? என்று ஆள ஆளுக்
கு இதே தமிழ்நாட்டில், யூகங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்
கள். பிரபாகரன் வி~யத்திலும் இதே யூகங்கள்தான், உண்மைச் செய்
திகளாக உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்த சுவாரஸ்யமான யூகங்களை அவிழ்த்துவிடுபவர்கள், இவற்றை நம்புபவர்
களில் படித்தவர், படிக்காதவர் என்ற பேதமெல்லாம் இல்லை. இதுபோன்ற
துர்மரணங்களின் போது கற்பனைகளும், யூகங்களும் நிஜம்போலவே காட்
சிதந்து, ஆயிரக்கணக்கானோருக்கு ஒரு சுவாரஸ்யச் சுவையை இ
லவசமாகவே அள்ளித் தந்துகொண்டிருக்கிறது. இதையே வியாபாரப்
பொருளாக்கி எழுதி, ஒளிபரப்பி, ஊடகத்தில் திடீர் உபரி ஆதாயம் தேடுபவர்
கள் அந்தக் காலத்திலும் உண்டு: இந்தக் காலத்திலும் உண்டு.
நேதாஜி சுபா~; சந்திரபோஸை பற்றி, இன்றும் கூட அவரது துர்மரணத்
தைப் பற்றிய வதந்தி சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த
விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார்.
ஆனால் அந்த நாட்களிலும், 'அவர் இறக்கவில்லை" என்று லட்சக்கணக்
கான ஜனங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வட இந்தியாவில் ஒரு
தாடி சாமியார் நேதாஜி போலவே இருந்தார். அந்தச் சாமியார்தான் நேதாஜி
என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏன், நம் தமிழ்நாட்டின் பிரபல
அரசியல் தலைவரான முத்து ராமலிங்கத் தேவர் கூட. 'நேதாஜி இறக்கவில்
லை" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இத்தனைக்கும் நேதாஜியின் அஸ்தி ஜப்பானில் வெகுகாலமாக இருந்தது.
சமீபத்தில்தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. நேதாஜி இறக்கவில்
லை என்ற சுவாரஸ்மான யூகத்தை, கற்பனையை, முத்துராமலிங்கத்
தேவரைப் போலவே பலரும், இன்றும்கூட நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
பிரபாகரன் மரணத்திலும் இதே சுவாரஸயமான யூகக் கற்பனைதான் இப்
போது உலா வந்துகொண்டிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் பழ.நெடுமாறன் போன்
றவர்கள் இருக்கிறார்கள். மக்களின் ஞாபக மறதியைப் பொறுத்து,
'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" என்ற கற்பனையும் நீண்டநாள் உயிர்
வாழும், அல்லது சிக்கிரமே மடியும்.
நன்றி:- துக்ளக்
0 விமர்சனங்கள்:
Post a Comment