இந்திய அரசின் கடமை - துக்ளக்
அப்பாவி மக்களை தனக்குப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அவர்கள் மத்
தியில் தான் பாதுகாப்பாக இருந்துகொண்டு, இலங்கை ராணுவத்
திடமிருந்து தப்பிக்க வழி தேடிய பிரபாகரனின் மரணம் எப்படி
வீரமரணமாகும்?
விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை
இலங்கை அரசு வெளியிட்டதிலிருந்து - அது பொய்ச் செய்தி என்று
கூறுகிற மறுப்புகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை
அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பது நிரூபிக்
கப்படாத வரையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் எடுத்துக் கொள்
ள வேண்டும்: பல பத்திரிகைகளும், இந்திய அரசும் கூட, இந்தச் செய்
தியை அப்படித்தான் பார்க்கின்றன.
பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்றால் - இங்கே ரத்த ஆறு
ஓடச் செய்ய வெண்டுமே, மக்கள் கொதித்தெழ வேண்டுமே, இந்தியா துண்
டாடப்பட வேண்டுமே -- என்கிற கவலை, பிரபாகரன் அதரவாளர்களுக்கு வந்
திருக்கிறது. அதனால்தான் அவர்கள் பிரபாகரன் இறக்கவே இல்லை" என்
று உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சொல்லிவிட்டால்
'பிரபாகரன் இறந்தால் இது இடியும், இது ஓடும்... என்றெல்லாம் அவர்கள்
சொன்னதைச் செய்து காட்ட வெண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
பிரபாகர பக்தர்கள், அவர் இறக்கவில்லை என்று கூறுவதற்கு இதுதான்
காரணம்.
'சரி, பிரபாகரனைப் புகழ நினைப்பவர்கள் புகழட்டும்' என்று விவரம் அறிந்
தவர்கள் பேசாமல் பேசாமல் இருப்பது சரியல்ல: இறந்துபோய்
விட்டவரை, விமர்சனம் செய்வது தேவையில்லை என்றாலும் --
அதற்கு ஒரு அவசியம் ஏற்படுகிறபோது உண்மைகளை நினைவுபடுத்
தாமல் விடுவதும் சரியல்ல. வேண்டாத, விபரீதமான வழிமுறைகளை ஊக்
குவிக்கிற வகையில், ஒருவர் புகழப்படுகிற போது -- அவருடைய
வழிமுறைகள், எத்தகையவாக இருந்தன என்று எண்ணிப் பார்ப்பது
அவசியம்.
வேறு எதற்கும் உதவவில்லை என்றாலும், 'தமிழ்ப் பற்றைக் காட்டுவதற்கு.
பிரபாகரனைப் புகழ்வது சுருக்குவழி" என்று பலர் தீர்;மானித்துவிட்டனர்.
அதனால்தானோ என்னவோ. பல பத்திரிகைகளிலும், பலருடைய அறிக்
கைகளிலும் 'வீரமரணம்" என்றும் 'தியாகம்" என்றும், பிரபாகரனின் இறப்பு
வர்ணிக்கப்படுகிறது.
இது எப்படி வீரமரணம் என்பது நமக்குப் புரியவில்லை. அப்பாவி
மக்களை தனக்குப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அவர்கள் மத்
தியில் தான் பாதுகாப்பாக இருந்துகொண்டு, இலங்கை ராணுவத்
திடமிருந்து தப்பிக்க வழி தேடிய பிரபாகரனின் மரணம் எப்படி
வீரமரணமாகும்?
தனது புலிப் படையினர் யாழ்ப்பாணத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்
தபோது, பல வருடங்கள் இவர் மட்டும் சென்னையில் பாதுகாப்பாக தங்
கியிருந்தாரே -- அதில் வீரம் எங்கே இருக்கிறது? சிறுவர்களைப் புலிகள்
படையில் சேர்த்து, இலங்கை ராணுவத்திற்கு எதிராக அவர்களை நிறுத்தி.,
தன் சார்பில் அவர்களை 'யுத்தம்" செய்ய வைத்து, அவர்களைப் பலி
கொடுத்தாரே பிரபாகரன் -- அது, வீரம் என்ற வர்ணனைக்கு உகந்தது?
சந்தனப் 'போராளி" வீரப்பன் பொலிஸாரால் கொல்லப்பட்டான்:
பிரபாகரன் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். இதில்
இரண்டாவது வீரமரணம் என்றால், வீரப்பன் சாவும் கூட வீரமரணம்
தானா? எழுபதாயிரம் மக்களைப் பிடித்து வைத்துக் கொண்டு
பாதுகாப்பு நாடி அவர்கள் நடுவே நின்று, தனது இறுதிப் போரை
நடத்தியவர், துப்பாக்கி ஏந்தியவர் என்பதால் அவருடைய மரணம்
வீரமரணம் ஆகிவிடாது.
அவர் வாழ்க்கை, தியாக வாழ்வும் அல்ல. தமிழர்களுக்குத் தன்னை விட்
டால் ஒரு தலைவர் இருக்கக்கூடாது என்று தீர்மானித்து, பல மிதவாத,
தீவிரவாதத் தலைவர்களை எல்லாம் கொன்று குவித்தவர் பிரபாகரன்.
ஒருவேளை, அவை எல்லாம் கூட -- ராஜீவ் கொலை கூட -- பிரபாகரன்
நடத்திய 'வீரக் கொலைகள்" என்று அவருடைய அபிமானிகள்
கூறிவிடலாம்: யார் கண்டது!
தமிழ்த் தலைவர்களைக் கொன்று, தமிழர்களை அடிமைப்படுத்தி,
அவர்களுடைய சிறுவர்களை இலங்கை ராணுவத்திற்குப் பலியாக்கி,
தமிழர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, பிரபாகரன் நடத்தியது
விடுதலைப் போர் அல்ல: தான் ஆள்வதற்கு, தன்னுடைய சர்
வாதிகாரத்தின் கீழ் ஒரு நிலப்பரப்புதான் அவர் நாடியது. ஒரு நிலப்
பரப்பைத் தனதாக்கி, அதில் வாழ்ந்த மக்களைத் தன்னுடைய
அடிமைகளாக்கி விட, ஒருவர் நடத்திய வெறிச் செயல்கள்--
விடுதலைப் போராட்டம் அல்ல, ஆதிக்க வெறி.
தமிழகத்தில், பிரபாகரனைப் பெரிய தியாகியாகவும், விடுதலைப் போராட்ட
வீரராகவும் சித்தரித்து நடத்தப்படுகிற பிரச்சாரம், தமிழகத்திற்கு எதிர்காலத்
தில் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. அது நிறுத்தப்படவேண்டும்.
இது ஒருபுறமிருக்க, இலங்கை அரசு உடனடியாக, இலங்கைத் தமிழர்களுக்
கு உரிய நிவாரணம் அளித்து, அவர்களுடைய மறுவாழ்வுக்கான எல்லா
நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இலங்கையில் தனிநாடு கோரிக்கை
எழுந்ததற்கும், தீவிரவாதம் பிறந்ததற்கும், முதல் காரணம் -- இலங்கை
அரசு, தமிழர்களை இரண்டாம் தர மக்களாக நடத்தியதுதான். இனியும்
அந்தக் கொடுமையைச் செய்யாமல், இலங்கை அரசு, தமிழர்களை சிஙகள
மக்களுக்குச் சரிநிகர் சமானமாக நடத்த ஆவன் செய்ய வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு ராஜீவ் -- ஜெயவர்த்தன ஒப்பந்தம் போன்;ற ஒரு
நன்மை நடந்ததில்லை. பிரபாகரன் புண்ணியத்தில், அது பாழானது. இப்
போது இலங்கை அரசு, அந்த ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த
வேண்டும். இந்தியாவில் இருப்பது போன்ற, ஒரு சம~;டி அரசை உருவாக்
க, அததான் சரியான ஆரம்பமாக இருக்கும்.
இலங்கையில் உள்ள, வெறிசார்ந்த கட்சியாகிய ஜே.வி.பி, மற்றும் புத்த
பிக்குகள் போன்றோரின் நெருக்குதலுக்குப் பயந்து ராஜபக~வின் அரசு,
தமிழர்களுக்குச் சம உரிமை தருகிற நடவடிக்கைகளில் தயக்கத்தைக்
காட்டினால் -- அது மீண்டும் தமிழ்ப் பகுதிகளில், பிரிவினைவாதம் எழத்தான்
வழி செய்யும். அப்படி நடந்தால், இம்முறை அப்பிரிவினை வாதத்தில், முன்
பு இல்லாத நியாயம் உள்ளடங்கியிருக்கும். அந்த நிலையில், இலங்
கையின் வறட்டுத் தனத்தை முடிவிற்குக் கொண்டுவருகிற பொறுப்பு,
இந்திய அரசினுடையதாகவிருக்கும். இதை இலங்கை அரசு இப்போதே
உணர்வது நல்லது.
இந்திராவின் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தவறான அணுகுமுறையைத்
திருத்தி அமைத்து, இலங்கைத் தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்க ராஜீவ்
காந்தி வழி தேடிய காலத்திலிருந்து -- இன்றுவரை, தொடர்ந்து வந்த
இந்திய அரசுகள் இலங்கை வி~யத்தில் சரியான அணுகுமுறையையே
கடைப்பிடித்து வருகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்
கையை நிறுத்துமாறு, இலங்கையை இந்திய அரசு நிர்ப்பந்திக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மத்திய அரசுக்கு விசே~ப் பொறுப்பு வந்திருக்கிறது. இலங்
கைத் தமிழர்களுக்கு, சம உரிமை, அமைதி, அவர்கள் வாழ்கிற
பகுதிகளில் முன்னேற்ற நடவடிக்கைகள் போன்ற ஜனநாயக
உரிமைகளைப் பெற்றுத்தர இந்திய அரசு முழுமூச்சுடன் முனைய வேண்
டும். சில சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பினாலோ, மற்ற எந்தக் காரணத்
தினாலோ, தமிழர்களுக்குச் சம உரிமை அளிப்பதில் இலங்கை அரசு
தயக்கம் காட்டினால், அந்தத் தயக்கத்தைத் தட்டித் தரைமட்டமாக்குவது
இந்திய அரசின் ராஜரீகப் பொறுப்பு.
பற்பல காரணங்களினால், சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துவிட்ட
இலங்கைத்தமிழர்கள். இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு இப்போது வழி பிறந்
திருக்கிறது. இந்த வாய்ப்பு கானல் நீராகப் போய்விடாமல் பாhத்துக் கொள்
வது இந்திய அரசின் கடமை.
நன்றி:- துக்ளக்
0 விமர்சனங்கள்:
Post a Comment