வடக்கு, கிழக்கில் தொடரும் கடத்தல்கள், காணாமல் போதல்கள்
வடக்கு, கிழக்கில் கடத்தல்கள், காணாமல்போதல்கள், படுகொலைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக முறைப்பாடுகள் செய்யப்படுகின்றபோதும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக காணாமல்போதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் மொத்தமாக 459 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், இதில் 128 முறைப்பாடுகள் கிழக்கிலும், 331 முறைப்பாடுகள் வடக்கிலும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அந்த ஆணைக்குழு கூறுகிறது.
129 சம்பவங்களுடன் மட்டக்களுப்பு மாவட்டமே மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு 32 கடத்தல்களும், 15 படுகொலைகளும், இடம்பெற்றிருப்பதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்னி மாவட்டத்தில் 40 கடத்தல்களும், 34 காணாமல்போதல்களும், இரண்டு படுகொலைகளும் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று திருகோணமலையிலிருந்து 49 சம்பவங்களும், அம்பாறையிலிருந்து 87 சம்பங்களும், மன்னாரிலிருந்து 24 சம்பங்களும், கந்தளாயிலிருந்து 13 சம்பவங்களும், யாழ்ப்பாணத்திலிருந்து 12 சம்பங்களும் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், முன்னாள் நீதிபதி ரி.ஏ.மஹாநாம கிழக்கு மாகாணத்தில் நடத்த சம்பவங்கள் குறித்து பொலிஸ் அதிகாரிகள், பிரதேச அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியிருந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் மக்களின் வாழ்க்கைநிலை வழமைக்குத் திரும்பியிருக்கும் அதேநேரம், திருகோணமலையில் பொதுநிர்வாகம் அமுலிலிருப்பதாகவும் அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும குறிப்பிடப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment