TNA கிஷோரின் மனைவி சுகந்தி கிஷோர் அரசின் ஜ.ம.சு.கூ.பின் வவுனியா நகரசபை வேட்பாளராக நியமிப்பு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அவர்களின் மனைவி சுகந்தி கிஷோர் அரசின் ஜ.ம.சு.கூபின் வவுனியா நகரசபைக்கான முதன்மை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். புலிகளின் அழிவிற்கு பின்னர் தமிழ்கூட்டமைப்பினர் ஒருவர் பின் ஒருவராக அரசில் இணைவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வன்னிமாவட்டத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இணையவுள்ளதாகவும் தெரியவருகின்றது. மக்கள் அவலவாழ்வை வாழ்ந்துவரும் நிலையில், அவ் மக்களின் துயர் குறித்து கவலையில்லா இந்த கூட்டமைப்பினர் தமது பதவியினை தக்கவைத்து கொள்வதிலேயே குறியாகவுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment