கூட்டமைப்புக்குள் குத்து வெட்டு அதிகரிப்பு! கிஷோர்,விநோதரலிங்கம், ஸ்ரீகாந்தா அரசில் இணைய முடிவு!
இதுவரை காலமும் புலிகளின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்டுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது இரண்டாக பிளவுபடும் நிலைக்கு சென்றுள்ளதுடன். அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசில் இணைந்து மந்திரி பதவிகளை பெற்றுக்கொள்ளவும் எண்ணியுள்ளதாக தெரியவருகின்றது.
வன்னியை இராணுவம் சூழ்ந்து புலிகளை சுற்றிவளைத்த நிலையில், இந்திய மத்திய அரசுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு TNAயினர் முன் அனுமதி கோரியிருந்தனர். கூட்டமைப்பினரின் கோரிக்கைக்கு அமைய புதுடில்லி வந்து தம்மை சந்திக்கலாம் என்றும் மத்திய அரசின் முக்கிய அமைச்சுக்களில் இருந்து முன் அனுமதி கிடைத்தது. அப்போது புலிகளின் குத்துவெட்டு உச்சக்கட்டத்தை ஆரம்பித்து ஸ்ரீகாந்தாவும், சம்பந்தரும் ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டதும், பி.பி.சி. தமிழோசையில் அதன் ஒலிவடிவத்தையும் பலரும் கேட்க முடிந்தது.
இந்திய அரசின் அனுமதியை ஏற்று அவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவிக்கையில், அதற்கு எதிர்மாறாக கூட்டமைப்பின் பா.உ ஸ்ரீகாந்தா தெரிவித்து இந்தியாவுக்கு எதிரான தனது வெளிப்படையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். இவ்வாறாக இவர்களுக்குள் மெல்ல மெல்ல விரிசலடைந்துவந்த குத்துவெட்டு தற்போது புலிகளின் தலைமையே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில், தமது பதவிகளை தக்கவைத்து கொள்வதற்காக அரசுடனும், புலிகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததுடன் அரசுடன் இணையாமல் இருந்து செயற்பட்டு வரும் தமிழ்கட்சிகளுடனும் பேச்சுக்களை நடாத்தி பாராளுமன்ற ஆசனங்களையும், சுகபோகங்களையும் தக்கவைத்து கொள்வதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீவிரம் காட்டிவருவதையே கடந்தவாரங்களில் இடம்பெற்ற சந்திப்புகள், நிகழ்வுகள், செய்திகள் தெளிவுபடுத்தியுள்ளன.
புலிகளின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்டுவந்த இந்த கூட்டமைப்பினர், தமிழீழமே முடிந்த முடிவு, புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் வெளிநாடுகளில் தமது குடும்பத்தினரை தக்கவைத்து கொண்டு தமிழீழம் கேட்டு போராடியவர்கள், அது மட்டுமல்ல எந்த சிங்கள அரசுக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்தார்களோ அதே அரசுடன் பின்கதவால் பேச்சு நடாத்தி தமது குடும்பத்தினர், உறவினருக்கான தேவைகளை நிவர்த்தி செய்த இந்த கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் தேவைகளுக்காக பேச்சு நடாத்தவில்லை, இன்றுவரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்கள் குறித்து கரிசனை கொள்ளாமல் புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றே கோரிவருகின்றனர்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இந்தியாவில் வசித்து மாரடைப்பால் மரணமான மருமகனுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் வேலை போட்டு தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியதுடன், அதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்த நிலையில் சம்பந்தரின் மருமகன் மரணமாகிவிட்டார். கனடாவின் ரொறன்ரோவில் வசித்துவந்த தனது மனைவி, பிள்ளைகளை இந்தியாவுக்கு அழைத்த சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்தியாவின் முன்னைநாள் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்களை அணுகி தனது மகளுக்கு இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கல்லூரியாக விளங்கும் மருத்துவ கல்லூரியில் அனுமதி பெற்றதும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கிஷோர் தனது குடும்பத்தினரின் தேவைகளுக்காக ஜனாதிபதியுடனும் அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஷவுடன் பின்கதவால் பேசி தமது தேவைகளை ப+ர்த்தி செய்து கொண்டார். இவ்வாறானவர்களுக்கு தமிழ்மக்களின் அவல நிலைகள் குறித்து பேசுவதற்குதான் முடியாமல் போய்விட்டது.
இவ்வாறான கொள்கைகளை கொண்ட இந்த கூட்டமைப்பு கூத்தாடிகள் தமது பதவி சுகபோகங்களை இழப்பதற்கு என்றுமே தயாரானவர்கள் இல்லை என்பதையே இவர்களது கட்சிவிட்டு கட்சிமாறு கொள்கையும், தமது தலைவனையே கொன்று வெறித்தனம் புரிந்த கொள்ளை, கொலை குழுவுடன் கூட்டுவைத்து பாராளுமன்றம் சென்றதும் இவர்களது கடந்த காலவரலாறுகள், இந்த கூட்டமைப்பினரின் பதவிகளுக்கு காரணமான புலிகள் அழிக்கப்பட்ட நிலையில், தமது பதவிகளை தக்கவைப்பதற்காக சிலர் அரசுடனும் சிலர் அரசுடன் இணையாமல் புலிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்துவரும் தமிழ்கட்சிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர்.
இதில் கிஷோர் உட்பட சில கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் குறித்து புலிகளின் தலைமை அழிக்கப்பட முன்பே நெருப்பு சுட்டிக்காட்டியிருந்தது. திரைமறைவில் அரசு நிலைப்பாட்டை எடுத்து செயற்பட்டு வந்த கிஷோர் அண்மையில் தாண்டிக்குளம் வரை நீடிக்கப்பட்டுள்ள புகையிரத நிலைய திறப்பு விழாவில் அரச அமைச்சர்களுடன் இணைந்து கொண்டிருந்ததுடன். நடந்து முடிந்த அவசரகால சட்ட வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தில் சமூகமளித்த கூட்டமைப்பினர் அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், இவர் மட்டும் வாக்களிக்காமல் மௌனம் காத்தும் இவர் அரசுடன் இணைவதற்குரிய வெளிப்படையான ஒளியாகவே கருதப்பட்டது. இறுதியாக வெளியான தகவல்களின் பிரகாரம் கிஷோர் அவர்களின் மனைவியான சுகந்தி கிஷோர் அரசின் ஜ.ம.சு.கூ.பின் வெற்றிலை சின்னத்தில் வவுனியா நகரசபைக்கான முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான விநோதரலிங்கம் என்பவர், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதியில்லாத நிலையில், அரசுடன் இவருக்கு உள்ள கள்ள உறவின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு அங்கே சென்றுவந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது முகாம்கள் சிறப்பாக இயங்குவதாக அரசிற்கு நற்சான்றிதழ் வழங்கினார். அது மட்டுமல்ல தமிழினத்திற்கு துரோகமிழைக்க விரும்பவில்லையாம், ஆகவே அரசு ஆதரவு நிலையை எடுத்துள்ள தமது அமைப்பின் மற்றுமொரு பிரிவாக செயற்படும் ஸ்ரீரேலோவுடன் இணைவதற்கான பேச்சுக்களை நடாத்தி வருவதாகவும், கூட்டமைப்பு போட்டியிடாவிட்டால் ரெலோ தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அரசுடன் உறவுகொண்டு எதிர்வரும் தேர்தலில் ஆளும்கட்சியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ள ஸ்ரீரெலோ ஊடகா அரசுடன் இணையவுள்ளார். இவரை பொறுத்தவரை அரசுடன் நேரடியாக இணையாமல் சுற்றிவளைத்து ஸ்ரீரெலோ ஊடாக அரசுடன் இணைந்து மந்திரி பதவியை பெற்று கொள்வதற்கான முயற்சி.
TNA.யில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு ரெலோ பா.உ ஸ்ரீகாந்தாவோ அரசுடன் இணைந்து கொள்ளாமல் புலிகளின் தவறான போராட்ட பாதையை கண்டித்துவரும் TULF,PLOTE, EPRLF(நாபா) அணியுடன் இரகசிய பேச்சுக்களை நடாத்தி அவர்களுடன் இணைந்து பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்து கொள்ள முயற்சி, இவர் மட்டுமல்ல TNAயின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடும், ஆகவே இந்நிலையில் இந்தியாவில் உள்ள சம்பந்தர், சுரேஸ், செல்வம், மாவை, சிவாஜிலிங்கம் போன்றவர்களின் நிலைப்பாடு இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந் நிலையில் கூட்டமைப்பு இரண்டாகவோ மூன்றாகவோ பிளவுபடும் நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சிவபுண்ணியமூர்த்தி
-கொழும்பு
நெருப்பு இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment