101 வயதிலும் எட்டு மணி நேரம் வியாபாரம் செய்யும் பிரிட்டிஷ் பெண்மணி
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் 101 வயதிலும் எட்டு மணிநேரம் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
101 வயதான கோனி பிறவுண் 81 ஆண்டுகளாக மீன்கடை நடத்தி வருகிறார்.
ஓய்வெடுக்காமல் தினமும் கடையைத் திறந்து 8 மணிநேரம் வியாபாரம் செய்கிறார். மீன்களைக் கழுவி சுத்தம் செய்து வெட்டி பொரித்து வியாபாரம் செய்கிறார். கடையை 7 நாளும் திறந்து வைத்திருக்கிறார்.
இந்தக் கடையை அவர் தன் கணவருடன் சேர்ந்து 1928 ஆம் ஆண்டு தொடங்கினார். அவர் கணவர் 1964 ஆம் ஆண்டு மரணமடைந்த பின்னர் இவரே இந்தக் கடையை நடத்தி வருகிறார். உதவிக்கு அவர் மகன் ஹில்டன் இருக்கிறார். அவரது மனைவியும் உதவி செய்கிறார். மகனுக்கு வயது 73 ஆகிறது.
இந்நிலையில், கோனி கடைக்குப் போகாமல் ஒருநாளும் இருந்தது கிடையாது. கடை வியாபாரத்தை மகனிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வுபெறும் எண்ணமும் அவருக்கு இல்லை. நான் ஏன் ஓய்வுபெற வேண்டும். 100 வயதானால் சாப்பிடாமல் இருக்கிறோமோ எனப் பதில் கேள்வி கேட்கிறார் கோனி.
0 விமர்சனங்கள்:
Post a Comment