எதுவித விசாரணையும் இன்றி 13 வருடங்கள் மகஸின் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எதுவித விசாரணைகளுமின்றி கடந்த பதின்மூன்று வருடங்களாக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முப்பத்துமூன்று தமிழ் அரசியல் கைதிகள் தமக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுத்தருமாறு பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு தமிழ்க் கைதிகளும் தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி கருணை காட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் விடுதலை குறித்துப் பிரதியமைச்சர் சட்டத்தரணிகளுடன் ஆலோசித்துள்ளதுடன் புதிய நிதியமைச்சர் மிலிந்த மொறகொட, பிரதியமைச்சர் வி.புத்திரசிகாமணி ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவந்து அவர்களினூடாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இக்கைதிகள் வடக்கு கிழக்கு மலையகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பெண்களும் அடங்குவர் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே அநுராதபுரம் சிறையில் வாடும் 25 தமிழ்க் கைதிகள் தமது விடுதலைக்கு உதவ நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு பிரதியமைச்சர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment