சவூதிஅரேபியாவில் 300இலங்கைப் பணிப்பெண்களை நாட்டிற்கு திருப்பியழைக்க நடவடிக்கை!
சவூதிஅரேபியாவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய 300இலங்கைப் பணிப்பெண்களை நாட்டிற்கு திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இந்தப் பணிப்பெண்களை நாட்டிற்கு திருப்பியழைப்பதில் தாமதம் நிலவுவதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து பணிப்பெண்கள் வெளியேறுவது தொடர்பாக அந்த நாடு அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாப்புத் திட்டமே காரணமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய குறித்த பெண்கள் மூன்று மாதங்களாக அந்நாட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் பணிப்பெண்கள் வெளியேறுவதற்கான ஆவணங்களை கடந்த வியாழக்கிழமை முதல் சவூதிஅரேபிய அரசாங்கம் விநியோகித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார். இவர்களை கட்டம் கட்டமாக அழைத்துவருவதற்கும் விமானப் பயணச்சீட்டு இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றக்கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களை இவர்களை மீண்டும் நாட்டுக்கு திருப்பியழைக்க சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment