ராஜீவ் கொலைவழக்குக் கைதி நளினி சிறையில் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 25ஆம் திகதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
ஒரு பெண் கைதிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை வெளியே சொன்னதால், தன்னை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மேலும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைக்க வேண்டும், சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அவர் 3ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment