இளம் கணவனும் மனைவியும் அலவாங்கால் மண்டை பிளக்கப்பட்டு கொடூரக் கொலை! கோண்டாவில் கிழக்கில் செவ்வாய் இரவு அக்கிரமம்
இளம் குடும்பத்தினரான கணவனும் மனைவியும் மண்டைபிளக்க அலவாங் கால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணியளவில் கோண்டாவில் கிழக்கில் நடைபெற்றுள்ளது. வீட்டில் இருந்த நகைகளும் பெறுமதியான பொருள் களும் சூறையாடப்பட்டுள்ளன.
அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ள இந்த இரட்டைக் கொலை யில் உயிரிழந்தவர்கள் க.சுரேஷ்குமார் (வயது 36), சு.சுகதீபா (வயது25) ஆகிய கணவனும் மனைவியும் ஆவர். இவர்கள் ஐந்து மாதங்களுக்குமுன்னரே திருமணம் செய்தவர்கள். கணவன் கோண்டாவிலைச் சேர்ந்தவர். கொக்குவிலில் உள்ள தனி யார் தொலைத்தொடர்பு நிலையம் ஒன் றில் பணிபுரிகிறார். மனைவி நவக்கிரியைச் சேர்ந்தவர்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் இருவரும் சேர்ந்து சமயல் வேலையில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு வந்தவர்கள் அவர்களை மண்டை பிளக்கும் விதத்தில் அலவாங்கால் அடித்துக் கொலை செய்து விட்டு அதனை கிணற்றில் வீசி விட்டுச் சென்றதாக சொல்லப்படுகின்றது.
வீட்டில் இருந்த பெருந்தொகைப் பெறுமதியான நகைகள் மற்றும் உடைமைகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.
இச் சம்பவம் குறித்து யாழ்.நீதிவான் எஸ்.ஆனந்தராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.
கொலையுண்ட இளம் குடும்பத்தினர் நேற்று முன்தினர் (செவ்வாய்க்கிழமை) தமது வீட்டில் இரவு 8.45 மணியளவில் இரவுச் சாப்பாட்டைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வேளை அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் இருவரையும் அலவாங்கால் தாக்கியுள்ளனர். இருவரின் முன் நெற்றிப் பக்கம், முன்பக்கம் ஆகியவற்றில் தாக்கி தலைப்பகுதி பிளக்கப்பட்டுள்ளது.
அதன்பின் அங்கிருந்த நகைகள், உடைமைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர் என்று விசாரணையில் கூறப்பட்டது.
நேற்றுக் காலை அங்கு சென்ற அயலவர்கள் இரத்த வெள்ளத்தில் இருவரின் சடலங்களையும் கண்டு கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி அங்குள்ள கிணற்றில் இருந்த சாரத்தில் இருந்து கிளிக்கப்பட்ட துணியால் சுற்றப்பட்ட நிலையில் அலவாங்கு ஒன்றை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment