“பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு வைகோ, நெடுமாறன் விரும்பவில்லை: பத்மநாதன்
ஈழத் தமிழர்கள், தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 'டெக்கான் குரோனிக்கல்' என்ற நாழிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
பத்மநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இந்தியா உட்பட சர்வதேசத்தின் பல நாடுகள், ஈழத் தமிழர்களின் துன்பங்களையிட்டு தமது கரிசனையை வெளிப்படுத்திவருகின்றனர். தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது" எனக் கூறியுள்ளார்.
'ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக, அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதிலுள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள். இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் தனது செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.
தலைவர் பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, 'அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்" என செல்வராஜா பத்மநாதன் பதிலளித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதும், அவரின் உறவினர்கள் எவரும் அந்தச் சந்தர்ப்பத்தில் முன்வரவில்லையெனவும் செல்வராஜா பத்மநாதன் கூறியுள்ளார்.
Tiger chief pins hopes on India
Just days after crowning himself the LTTE leader post-Prabhakaran, Selvarasa Pathmanathan alias KP expressed confidence that India would help Eelam Tamils achieve their aspirations for a separate homeland.
In an interview to the Deccan Chronicle from an undisclosed location in Europe, he also said MDMK general secretary Vaiko and Sri Lankan Tamil Protection Movement convenor P. Nedumaran were unwilling to accept the fact that Prabhakaran was dead.
When asked about Mr Vaiko and Mr Nedumaran maintaining that Prabhakaran was still alive, he said, “They are unwilling to accept the truth. Our leader attained martyrdom along with other cadres in the last phase of war at Mullivaikkal.”
He said he tried to get the mortal remains of the slain LTTE chief. “However, our leader’s blood relatives did not come forward to receive his body,” he said.
KP said several countries in the world, including India, have expressed their concern to the Sri Lankan government about the sufferings of Eelam Tamils.
“At present, we have constituted a working committee that will explore the idea of forming a transnational Tamil Eelam government. The committee is drafting an action plan to achieve Tamil Eelam which has been the dream of our people for over half-a-century,” he said.
“India stood by the marginalised people in the past and helped them achieve liberation. Eelam Tamils across the globe believe that India will help them achieve liberation as it did in the past. India should understand us,” he said when asked about India’s role in the future of Lankan Tamils.
KP also expressed the confidence that the Sinhalese government would accept ethnic Tamils as their equals in due course.
(Deccan Chronicle)
0 விமர்சனங்கள்:
Post a Comment