இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Monday, July 6, 2009

உங்களின் புதிர்களுக்கு வரதரின் விடைகள்

அன்பார்ந்த நண்பர்களே ஆற்றல் மீகு தோழர்களே!

புலிகள் அழிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து புலி ஆதரவாளர்களிடமும் ஏனையோர்களில் ஒரு பகுதியினரிடமும் ஒரு கேள்வி குழப்பமான கேள்வி எழுந்துள்ளது. இது புலியை வைத்து பிழைப்பு நடத்தி வந்த பிரமுகர்கள் தமது ஏமாற்றுத் தொழிலை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் வைத்திருப்பதற்காக மேற்கொண்டுள்ள திட்டமிட்ட பிரச்சாரத்தின் விளைவான ஒரு குழப்பம்தான். எனினும் இந்தக் குழப்பம் பரவலாக பலரிடமும் உண்மையாகவே உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

குழப்பம்

பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டு விட்டதால் தமிழர்கள் மத்தியில் ஒரு தலைமை இடைவெளி (Leadership Vacuum) ஏற்பட்டிருக்கின்றது. அதை இனி யாரால் நிறைவு செய்யமுடியும்? இந்தக் குழப்பத்தில் அகப்பட்டுப் போயிருக்கும் உண்மையானவர்களை தெளிவுபடச் செய்வது ஒரு சமூகக் கடமையாகும்.

தெளிவு விளக்கம் :-

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! புலிகள் எந்தவொரு கட்டத்திலும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுமல்ல, புலிகள் எந்த வேளையிலும் பரந்துபட்ட தமிழ் மக்களின்; நலன்களைப் பிரதிநிதிப்படுத்தியவர்களுமல்ல. இன்னும் சொல்லப்போனால், தமிழர்களை ஏமாற்றி இலங்கைத் தமிழர் தமிழ் சமுதாயத்தையே சீரழித்த ஒரு மக்கள் விரோதக் கூட்டம்தான் புலிகள். தமிழர்களின்; துன்பங்களையும் துயரங்களையும் தமிழர்களுக்கே வியாபாரம் பண்ணி காசாக்கியது, தமிழர்களின் அபிலாஷைகளை அவ்வப்போது வெளிநாடுகளுடனும் சிறிலங்கா அரசுடனும் பேரம் பேசி ஆயிரக்கணக்கில் ஆயுதங்களையும் கோடிக்கணக்கில்; டொலர்களையும்; பெற்றது, தமது சண்டித்தன ஆட்சியை நிலை நாட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களை அநாவசியமாக பலி கொடுத்தது, பின்னர் அவற்றை வைத்து புகழ் சம்பாதித்தது, பால் கொடுத்து வளர்த்த தமிழர்களையே கொத்தி தமது அடக்குமுறை ஆட்சியை நிலைநாட்டியது,,, இவற்றில்தானே புலிகள் அக்கறை காட்டினார்கள்

இந்த விடயங்களை வரிசைப்படுத்தி நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை. புலிகளி;ன் கடந்த காலத்தை நீங்களே தொகுத்து சிந்தித்துப் பாருங்கள்!

புலிகள் தங்களுடைய நலன்களுக்காக தமிழர்களின் தலைவர்களையும் தமிழர்கள் மத்தியில் உண்மையான தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த பெரும்பாலானவர்களையும் அழித்தவர்களே தவிர,தமிழர் சமுதாயத்துக்குத் தலைமை கொடுத்தவர்களல்ல. தமது காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத்தினால் சமூகத்திலிருந்த பெருந்தொகையான அறிவார்ந்தவர்களையும், சமூகத் தலைவர்களையும், தலைமை ஆற்றல் வாய்ந்த இளம் தலைமுறையினரையும் எந்த நேரமும் கொல்லப்படலாம் என்ற பயக்கெடுதியை ஏற்படுத்தி வெளிநாடுகளை நோக்கி விரட்டியவர்களும் புலிகளே.

உண்மையில் தமிழர்கள் மத்தியில் மிகுந்த ஆற்றல் வாய்ந்த தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் இருந்தார்கள். அந்த நிலைமைகளையெல்லாம் சீரழித்ததே புலிகள்தான். ஒரு மக்கள் போராட்டத்தின் கால ஓட்டத்தில் வேறுவேறு - பல்வேறு ஆற்றல்கள்மிக்க, தியாகங்கள்; நிறைந்த, நேர்மையான, ஒழுக்கமுடைய தலைவர்கள் உருவாகுவது இயல்பே. ஆனால் தமிழர்களின் போராட்ட வரலாற்று ஓட்டத்தில் அந்த விடயம் தலைகீழாகவே நிகழ்ந்தது,

சமூகத்தில் இருந்த நல்ல அரசியல் நடத்தை கொண்டோர் புலிகளால் துரத்தப்பட்டார்கள்,

நேர்மையாக நடந்தவர்கள் - நடக்க முற்பட்டவர்கள் பெரும்பாலும் புலிகளால் ஓடோட விரட்டப்பட்டார்கள், இதனால் புலிகளுக்கு வால்பிடித்து பிழைப்பு நடத்தியவர்களின் புலித் தோத்திரங்களையே மக்கள் கேட்க முடிந்தது,

ஆற்றல்கள் மிக்க போராளிகள் பலர் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள், இதனால் பெற்றோர்கள் பெரும்பாலும் காணியை விற்றென்ன தாலியை விற்றென்ன தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுவதிலேயே முனைப்பானார்கள்,

சுதந்திரம் பற்றி சுதந்திரமான சிந்தனை கொண்டவர்கள் பலர் கேட்பாரின்றிக் கொல்லப்பட்டார்கள் மேலும் பலர் ஆயுதமுனையில் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள், இதனால் புலிகளின் சட்டம்,,,,, புலிகளின் காட்டுதர்பார் நீதி, புலிகளின் சிவப்புக் கட்டளைகள் ஆகியவற்றிற்கு கைகட்டி சேவகம் செய்தோர் மட்டுமே ஊரில் உயிர் பிழைத்தார்கள், தாங்க முடியாமல் தவித்தோர் ஒருவாறு வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பினார்கள்.

கேள்வி எழுப்பிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் புலிகளால் கடத்தப்பட்டு காணாமற் போனார்கள்; அல்லது துரோகி என்ற ஒரு காகிதத் துண்டுடன் வீதியோரங்களில் தேடுவாரற்று நாட்கள் கடந்த பிணமாகக் கிடந்தார்கள். புலிகளை விமர்சிக்க நினைத்தாலே நெத்தியில் துப்பாக்கியின் பொட்டு விழும் என்ற பயத்தால் தமிழர்கள் மத்தியில் இருந்த அறிஞர்கள், சிந்தனையாளர்கள் தம்மைத் தாமே ஊமையாக்கிக் கொண்டார்கள், கண்முன்னால் நடந்து கொண்டிருந்த கொடூரங்களை கண் திறந்து பார்க்காமலே இருக்கப் பழகிக் கொண்டார்கள். அவ்வாறாக கடுமையாக கண்மூடி ஊமைவிரதம் கடைப்பிடித்ததால் அந்த தமிழ் அறிஞர்களும் சிந்தனையாளர்களும் காலப்போக்கில் சமூக விடயங்களில் - பொது விடயங்களில் கண்ணிருந்தும குருடர்களாகிப் போனார்கள் காதிருந்தும் செவிடர்களாகிப் போனார்கள்.

புலிகள் சொல்லிக் கொடுப்பதை மட்டுமே சொல்லும் கிளிப்பிள்ளைகளாகிப் போனார்கள், புலிகளால் இவர்கள் கைநாட்டுகளாக்கப்பட்டார்கள், இதனால் தமிழர்களின் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் புலிகளுக்கு ஆலவட்டம் பிடித்த ஆசிரியர்களும் புலிகளுக்கு அரோகரா போட்ட மாணவர்களும் புலிப் பூச்சாண்டி காட்டி அந்த நிறுவனங்களின் அனைத்து விடயங்களையும் அந்நிறுவனங்களிலிருந்த அனைவரையும் தம் கடிவாளங்களின் பிடியில் வைத்திருந்தனர் ,

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து புலிகளுக்குத் தாரை வார்க்கத் தயாராக இருக்காத அரசாங்க ஊழியர்கள் மண்டையில் வெடி வைத்துக் கொல்லப்பட்டார்கள், மாறாக பலிகளின் கட்டளைப்படி மக்களின் நிவாரணப்பணங்களையும் புனர்நிர்மாண ஒதுக்கீடுகளையும் பகற் கொள்ளையடித்து புலிகளோடு பங்கு போட்டுக் கொண்டவர்களே கொட்டமடித்து ராஜ்ஜியம் செய்தார்கள்.

ஒழுக்கக் கேடானவர்களும் ஊழல்ப் பேர்வழிகளும் புலிகளின் கூட்டாளிகளாகி சமூகத்தை ஏமாற்றி ஆளவும் சுரண்டிக் கொழுக்கவும் புலிகளின் ஆட்சியில் வசதி பெற்றார்கள

புலிகளின் தலைமைக்கு நாளாந்தம் குளிரூட்டும் புகழாரங்களைப் புனைந்தும், புலிகளின் கொலைகளுக்கும் கொடூரங்களுக்கும் கொள்ளைகளுக்கும் வக்காலாத்து வாங்கியும் வந்த பத்திரிகைகளைத் தவிர, வேறு பத்திரிகை எதுவும் தமிழர்கள் மத்தியில் விற்கப்படக் கூடாது என புலிப்பாசிசம் நிலைநாட்டிய சுகத்தில் லாபகரமான பத்திரிகை வியாபாரம் செய்துகொண்ட பத்திரிகா தர்மவாதிகளின்| எழுத்துக்கள் மட்டுமே சுமார் இருபது ஆண்டுகளாக மக்களுக்கு தவிர்க்க முடியாத செய்திகளாகவும் உலக அறிவுத்தகவல்களாகவும், ஏன்? அரசியல் வழிகாட்டிகளாகவும் அவையே இருந்தன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமைகளை நிராகரித்துவிட்டு, புலித்தலைமையின் திட்டப்படி புலி உறுப்பினர்களையும் புலிகளின் வால்களாக உள்ள ஏஜண்டுகளையும் கொண்ட சுமார் 5000 பேர் 1000 வாக்குப் பெட்டிகளில் 200000 கள்ள வாக்குகளை நிரப்பித்தான் 22; வெட்கம் கெட்ட அரசியற் கோமாளிகளையும், சமூகத் திருடர்களையும தமது ஊதுகுழல்களாக புலிகள் நாடாளுமன்றம் அனுப்பினார்கள் என்பது உலகறிந்த விடயம்.

மற்றக்கட்சிகளின் ஆதரவாளர்களென்று எவர் தம்மை எந்த வடிவில் காட்டிக் கொண்டாலும் அவர்கள் எவரும் உயிரோடு இருக்க முடியாது, அவர்களின் குடும்பத்தவர்கள் ஊரிலே இருக்க முடியாது என்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டது யாரும் அறியாத ஒன்றல்லவே.

சண்டித்தனத்தில் ஊரை அடக்கி வைத்திருப்பவர்களுக்கும் ஒரு சமூகத்தின் தலைவர்களுக்கும் அடிப்படையில் நிறையவே வேறுபாடுன்று என்பதை நாம் இங்கு புரிந்து கொள்வது அவசியமாகும். ஒரு சமூகத்தின் தலைவர்களையும் அடிதடி குண்டர்களைக் கொண்ட தாதாக்களையும் சமப்படுத்தி ஒரே சமூகக்கண்ணோட்டத்தில் அளவெடுப்பதுவும் அங்கீகாரம் வழங்குவதுவும் எவ்வளவு தவறோ அதுபோன்றதே புலிகளைத் தலைவர்கள் என்று சொல்லுகின்ற - கருதுகின்ற தவறும் ஆகும்.

பெரும் சந்தைகள் கொண்ட நகரங்களில் தெருக்கள் தோறும் பொல்லு, கத்தி, வெட்டறுவாள், சைக்கிள் செயின் என ஆயதங்கள் தாங்கியபடி கடைகடையாக சென்று மிரட்டி கப்பம் வாங்கும் கூட்டத்தினர் இருப்பதை பல தமிழ் சினிமாக்களில் காட்டியிருக்கிறார்கள்.

அந்தக் காட்சிகளை நீங்கள்; பலர் பார்த்திருப்பீர்கள். இந்த கப்பம் வாங்கும் குழுக்கள் ஏரியாவுக்கு ஏரியா எந்த ஏரியா யாருக்கு என தமக்குள் பங்கு போட்டுக்கொண்டு கப்பம் திரட்டி ஒரு சட்டவிரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பார்கள். “ஒரு உறையில் ஒரு வாள்தான் இருக்க முடியும் என்பது போல ஒரு ஏரியாவுக்கு ஒரு தாதா மட்டும்தான் இருக்க முடியும்” என தனிப்பிரதிநிதித்துவ உரிமை வாதமும் இவர்களிடம் உண்டு. அதனை ஒரு தமிழ் சினிமாப்படத்தில் நடிகர் விவேக்கின் கொமெடியாகக் காட்டியிருப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள கடைக்காரர்களும் அங்கு வாழ்பவர்களும் பெரும்பாலும் எந்தவிதமான எதிர்ப்புமின்றி தமது ஏரியாவில் கப்பம் வாங்கும் தாதா கூட்டத்திற்கு அடங்கிப் போவார்கள். அந்த ஏரியாவில் சில்லறைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நாட்டாண்மை நீதிபதிகளாகவும் அந்த ஏரியா தாதாக்கள் செயற்படுவார்கள். இந்த ஏரியா தாதாக்களுக்கு மேலாக அந்த நகரம் முழுவதற்குமான பெருந் தாதாக்களும் இருப்பார்கள். இந்த பெரிய தாதாக்கள் சிறிய தாதாக்களை அடக்கி ஆளும் வகையில் மேலான ஆயதபலமும், சண்டித்தன வல்லமையும் கொண்டவர்களாவர்;.

இந்த பெருந்தாதாக்களுக்கு சின்னதாதாக்கள் தவறாமல் தமது கப்பத்தில் ஒரு பங்கை செலுத்திவிடுவார்கள். இந்த பெரிய தாதாக்கள் நேரடியாக மக்களோடு உறவு வைத்திருக்க மாட்டார்கள். பொதுமக்களோ இவர்களின் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள்.

இவர்கள் ஆயுதங்கள், போதை மருந்துகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவற்றைக் கள்ளக்கடத்தல் செய்வார்கள், கள்ள நோட்டடிப்பார்கள்;, பேரப்பேசிக் கொலைகள் செய்வார்கள்;, தம்மை எதிர்ப்பவர்;களையும் தமக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களையும் தயவுதாடசண்சணமின்றி கொலை செய்துவிடுவார்கள், தேர்தற் காலங்களில் தமக்கு ஆதரவானவர்களை வெல்லப்பண்ணுவதற்கான எலடலா வகையான சட்டவிரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள், இதற்காக சட்டப+ர்வமான நிர்வாக அமைப்புகளையெல்லாம் பணம் கொடுத்தும் மிரட்டியும் தமக்குச் சார்பாக செயற்பட வைப்பார்கள்.

அந்தவகையான ஒரு தனிப்பிரதிநிதித்துவ சண்டியர்களாக தமிழர்களை ஆண்டவர்கள்தான் புலிகள்.

இந்த தாதாக்களும் சட்டத்தின் பிடியில் அகப்படும்வரை சமூகத்தில் பெரும் பிரமுகர்கள்தானே! ஆனாலும் எந்த சமூகமும் இவர்களை சமூகத் தலைவர்கள் என கருதுவதுமில்லை - சொல்வதுமில்லை.

புலிகளின் சர்வ தேசக் குரல் பாலசிங்கமே ஒரு முறை (1986ல் ரெலோ மீது தாக்குதல் நடத்திய சில நாட்களில்) தங்கள் புலி அமைப்பானது ஒரு வல்லமை பொருந்திய மாபியா அமைப்பு போன்றது என மிகவும் தற்பெருமையோடு பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார்.
எனவே புலிகள் தமிழ்ச் சமூகத்தில் சர்வதேசர்Pதியில் பரந்ததோர்; கொலைகார கொள்ளைக்கார வலைப்பின்னலைக் கொண்டிருந்த ஒரு மாபியாக் கும்பலே என்பதில் சந்தேகமில்லை.

புலிகளும் தமிழீழ விடுதலைப் போர்வையைப் போர்த்திக் கொண்டு செயற்பட்டு வந்த இன்னொரு வகையான சமூக விரோத, மக்கள் விரோத, ஜனநாயக விரோத, மனித உரிமைகள் விரோத - ஏன் முழு மனித குலத்துக்குமே விரோதமான பயங்கர வாத தாதாக்களே. இதனால்த்தான் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத உலக நாகரீகம் ஒன்று திரண்டு மோசமான விஷக் கிருமிகளை அழிப்பது போல் புலிகளை அழித்தது.

அப்பாவித்தனமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புலிகளுக்கு பணங்களை அள்ளிக் கொடுத்தும் நம்பிக்கையோடு ஆதரவையும் கொடுத்தார்கள் என்பதனாலோ அல்லது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புலித்தலைமையை கண்மூடித்தனமாக நம்பி தமது உயிர்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதனாலோ ஒரு மக்கள் விரோத மாபியாக் கூட்டம் பரந்துபட்ட தமிழ் மக்களின் தலைமைத்துவம் ஆகிவிடமாட்டாது.

தமிழர்கள் எவரையும் புலிகள் தமது கருத்தாலோ அன்பாலோ எந்தக் கட்டத்திலும் வென்றது கிடையாது. தமது ஆதரவாளர்களின் மாற்று ஆலோசனைகளைக் கூட புலிகள் கேட்டது கிடையாது. மக்கள் சுதந்திரமாக வாக்களித்து புலிகளை தமது தலைவர்களென எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலைநாட்டியது கிடையாது.

புலிகள் தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் பயனுடையவர்களாக இருந்தது கிடையாது. மாறாக புலிகள்தான் தமது தேவைகளுக்காக தமிழ் மக்களை கொள்ளையடித்தார்கள் மக்களின் உழைப்பை காய்ந்த தென்னை மட்டையிலிருந்து கருவாடான மீன்வரைக்கும் வரிபோட்டுக் கறந்தார்கள்,

ஒரு அரிசி விளைந்த இடத்திலிருந்து அதை உண்பவனின் கைக்குப் போவதற்கிடையில் ஆறு இடத்தில் அந்த அரிசிக்கு வரி விதித்தார்கள் -
1) விளைந்த நிலத்துக்கு வரி,
2) விளைந்த அளவுக்கு வரி,
3) நெல்லை ஆலைக்கு கொண்டு செல்கையில் அந்த வாகனத்துக்கு வரி,
4) அந்த நெல்லை அரிசியாக்கையில் அந்த ஆலையிடம் வரி,
5) அதை வாங்கி விற்கையில் மொத்த வியாபாரியிடம் வரி.
6) பின்னர் அதை வாங்கி நுகர்வோருக்கு விற்கையில் அந்த சில்லறை வியாபாரியிடம் வரி.
உலகில் எந்தப் பொருளாதார நிபுணனாலும் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு வரி முறைகளைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி தமிழர்களை எலும்பும் தோலுமாக்கியவர்கள்தான் புலிகள்.

வரி மட்டுமா

இலங்கை அரசாங்கம் மக்களுக்கு அனுப்பிய ரேசன் உணவுகளையெல்லாம் தமிழீழ அரசாங்கத்துக்கென பறித்தெடுத்து விட்டு புலிகள் தமது சரக்குக் கிடங்குகளில் வைத்திருந்த பழங்கடையான் சாமான்களை மக்களுக்கு விநியோகித்தார்கள்,,, ஆசிரியர்கள் குமாஸ்தாக்கள் கச்சேரி ஊழியர்கள் கால்வாய் துப்பரவு செய்கிறவர் வரை என அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் அரை வயிற்றுச் சம்பளத்தில் கட்டாயப் பங்கென எட்டு சதவீதம் தொடக்கம் இருபது சதவீதம் வரை பிடுங்கிக் கொண்டார்கள்,,,

அரசாங்கம் புனர்நிர்மாணத்துக்கென அவ்வப்போது அரிதாக அனுப்பிய பணங்களில் பதினைந்து தொடக்கம் முப்பது சதவீதம் வரை திரட்டி அதைக் கொண்டு வந்து புலிகளின் கைகளில் கொடுப்பது அரசாங்க அதிகாரிகளின் கட்டாயக் கடமையென ஆக்கினார்கள், அதற்கான நக்கும் பங்கை அந்த அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்கி சமூகத்தில் எங்கும் புலிகள் ஊழலைப் பெருக்கினார்கள்,,,,

புலிகள் ஒரு அரசாங்கம், அந்த புலி அரசாங்கம் செயற்படுவதற்குத்தான் மக்களிடமிருந்து வரி அறவிடப்படுகிறது என புலிப் பாலசிங்கம் ஒரு முறை கூறினார். ஓர் அரசாங்கம் மக்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு ஒரு பொருளாதார சமூக நியாய அளவுகோல் - தத்துவம் உண்டு. அது ஒரு புறமிருக்க புலிகளென்ன மக்களின் அரசாங்கமா??? புலிகளென்ன விவசாயத்தைப் பெருக்கினார்களா? புலிகளென்ன நகரங்களைக் கட்டியெழுப்பினார்களா? புலிகள் திரைகடலோடும் சர்வதேச வர்த்தகத்தை தமிழ்ப்பிரதேசங்களில் பெருக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த்pனார்களா? தமிழ் மக்களுக்கு நவீன உலகை உருவாக்கிக் கொடுத்தார்களா? அல்லது தமிழ் மக்கள் மத்தியில் நவீன சிந்தனைகளைத் தான் சுதந்திரமாக வளரவிட்டார்களா - நடமாட விட்டார்களா? குறைந்த பட்சம் தமிழ் மக்கள் எப்போதாவது நிம்மதியாக வாழ வேண்டும் நினைத்திருப்பார்களா? அங்கோலாவின்; சவிம்பியை விட மோசமான பிரபாகரன்,,,

ஹிட்லரின் கோயபல்ஸை விட மோசமான பாலசிங்கம், கம்போடியாவின் பொல்பொட்டை விட மோசமான பொட்டம்மான் இவர்கள் தாலிபான்களை விட மோசமாக அல்லவா நடந்து கொண்டார்கள்,,, இவர்களை தலைவர்கள் என்று நினைத்துப் பார்ப்பதற்குக்; கூட ஒருவன் அருவருப்பாக வேண்டும்.

புலிகள் பல்வேறு திறமைகளைப் பாவித்து நினைத்துப்பார்க்க முடியாதவாறு கொலைகள் செய்தார்கள்,, புலிகள் பல்லாயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவக்காரர்களைக் கொன்றார்கள்,, இலங்கையின் பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை அழித்தார்கள்

பல நூற்றுக்கணக்கான அப்பாவி சிங்கள மக்களையும் ஆயுதங்களற்ற பிக்குகளையும் கொன்றார்கள்,, ஏனைய இயக்கங்களை சவால் விடமுடியாதவாறு தடை செய்தார்கள், ஏனைய இயக்கங்கங்களின் பல ஆயிரக்கணக்ணக்கான போராளிகளைக் கொடூரமாகக் கொலை செய்தார்கள்,,, ரயர் போட்டு உயிரோடு எரித்துக் கொன்றார்கள்,

மரத்திலே தலை சிதற அடித்துக் கொன்றார்கள்,,, மோட்டார் வாகனங்களின் பின்னால் கட்டி நிர்வாணமாக உடல் தார் வீதிகளிலே கிழிந்து சிதற சிரித்து மகிழ்ந்தார்கள் மல்லாவியிலும் முல்லைத்தீவிலும் மாற்று இயக்கத்தவர்களையும் தமக்கு அடங்காதவர்களையம் மூன்றடி இரும்புக் கூண்டுகளில் அடைத்து பட்;டினி போட்டுக் கொன்றார்கள் துணுக்காயிலும் வெருகலிலும் முதலைகளுக்கு மனித உயிர்களை இரையாக்கி மகிழ்ந்தார்கள் கொலை செய்யாத நாட்களில் தங்களுக்கு கை கால் நடுக்கிறது என டாக்டர்களை நாடிய புலித்தலைவர்கள் பலரை யாழ்ப்பாண மனநோய் டாக்டர்கள் கண்டிருக்கிறாhர்கள்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலிகள் விதம் விதமாக வியூகங்கள் வகுத்து தமிழ்மக்களைக் கொள்ளையடித்தார்கள்,,,, தங்களை எதிர்த்தவர் யாரையும் யாழ்ப்பாணத்திலும் கொல்ல முடியும். சென்னையிலும் கொல்ல முடியும் பாரிஸிலும் கொல்ல முடியும். கனடாவிலும் கொல்ல முடியும் என உலகளாவிய வகையில் தமது கொலைத் திறமைகளை நிரூபித்துக் காட்டினார்கள். பலாலியில் என்ன கட்டுநாயக்காவில் கூட விமானங்களை அழித்துக்காட்டினர்கள்,, வவுனியாவிலுள்ள மின்சார இணைப்புக் களென்ன கொலன்னாவையிலேயே பெற்றோலியம் தாங்கிகளை அழித்துக் காட்டியவர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலையமென்ன,,, மத்திய வங்கி, உலக வர்த்தக மையம் என நீண்ட நெடிய கட்டிடங்களை கொழும்பிலேயே வெடி வைத்து நொருக்கியவர்கள்

எல்லா அழிவுகார நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டினார்கள்தான். ஆனால், ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்து கொடுத்தார்களா? பெற்றுக் கொடுத்தார்களா?

உடைத்தார்கள்!
அழித்தார்கள்!
கொன்றார்கள்!
கொள்ளையடித்தார்கள்!
இவற்றை செய்வதற்காகவா ஒரு விடுதலை இயக்கம்!

இவற்றுக்காகவா தமிழ் மக்கள் சொல்லொணா இழப்புக்களின் மத்தியில் இவர்களுக்கு ஆதரவளித்தாhகள்? அதைச் செய்வதுதான் ஒரு சமூகத் தலைமையின் கடமையா?

ஊரில் தமிழ் மக்களை பெரும்பாலும் ஓண்டாண்டிகளாக்கியது மட்டுமல்லாது அந்த ஏழைகளின் பிள்ளைகளைப் பலாத்காரமாகப் பிடித்துக்கொண்டு போய் போர்க்களங்களின் முன்னணியில் விட்டு சுடுகாடுகளை நிரப்பியவர்கள்தானே புலிகள்!

புலிகள் தமிழ் மக்களுக்கு உயிரழிவுகளையும் உடைமை அழிவுகளையும், துன்பங்களையும் துயரங்களையும். இழவு ஓலங்களையும் அகதி வாழ்க்கையையும் தவிர வேறெதனை சாதித்துக் கொடுத்திருக்கிறார்கள்,,,, சிங்கள இனவாதிகளின் முன்னால் அவமானமும், சர்வதேசங்களின் முன்னால் பிரிவினைவாதிகள் என்ற அடையாளமும், இந்தியாவின் முன்னால் நம்பத் தகாதவர்கள் என்ற அபிப்பிராயமும் கிடைத்ததை ,,,, ஏற்படுத்தியதைத் தவிர கடைசிவரையிலும் புலிகள் எந்தவொரு நன்மையையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது இல்லையே!

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை தமிழர்களுக்குத் தலைமை தாங்கியது என்று சொல்வது ஓர் அபத்தமான – வெட்கக் கெடான ஒரு வார்த்தையாக இல்லை?

ஒரு குடும்பத் தலைவனுக்கும் வீட்டுக்கு வருபவர்களைக் குலைப்பதற்கும் கடிப்பதற்கும் வளர்க்கப்பட்ட நாய்க்கும் தமிழ்ச் சமூகத்தில் வித்தியாசமில்லையா? அந்த நாய் விசர்பிடித்து குடும்பத்திலுள்ளவர்களையே கடித்துக் குதறிய பின்னும் அந்த நாய் எங்கள் வீட்டு செல்ல நாய்! நாங்கள் அன்பாக ஆதரவளித்து வளர்த்த நாய் என்று எந்த பகுத்தறிவு உள்ளவன் எவனாவது சொல்லி அதனை பராமரிக்க ---- பாதுகாக்க முற்படுவானா?

தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை சரியாக நெறிப்படுத்தப் போகின்றவர்களை தெளிவாக அடையாளம் கண்டுகொள்வதற்கு புலிகளால் தமிழர்களுக்கு நடந்ததென்ன? விளைந்ததென்ன? என்பது பற்றி தமிழர்கள் மத்தியில் தருக்கபூர்வமானதோர் ஆய்வும் பகுத்தறி பூர்வமானதோர் கண்ணோட்டமும் அவசியமாகும்.

புலிகள் தமிழர்கள் மத்தியில் இருந்த தலைவர்களை அழித்துவிட்டதால் தமிழர்கள் மீது அநுதாபம் கொண்ட உலக நாடுகளின் அரசாங்கங்களும் தலைவர்களும் தவிர்க்க முடியாமல் புலியினூடாக தமிழர்களுக்கு உதவுவதற்கு முன்வந்தார்கள். தமிழ் மக்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையெல்லாம் வேண்டுமென்றே - தெரிந்தே நாசம் பண்ணிய புலிகள் எப்படி தமிழ் மக்களின் தலைவர்களாக இருந்திருக்க முடியும். ஒரு சமுதாயத்துக்கு நல்லது செய்பவன்தான் - குறைந்தபட்சம் நல்லதைச் செய்ய முயற்சிப்பவன்தான் ஒரு சமுதாயத்தின் தலைவன் ஆவான். ஆனால் இங்கோ!

கிடைத்த நல்லதையெல்லாம் - நல்ல வாய்ப்புக்ளையெல்லாம் நாசம் பண்ணியவனைத் தலைவன் என்று சொல்லுபவர்கள் அல்லது கருதுபவர்கள் படுமுட்டாள்களாக அல்லவா இருக்க வேண்டும்! இவ்வளவுக்கும் பின்னரும் விடயங்களைத் தெரிந்திருந்தும் புரியக் கூடிய ஆற்றல் இருந்தும் அப்படி சொல்பவர்கள் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றிப் பிழைக்க முற்படும் சமூக அயோக்கியர்களாகத்தான் இருக்க வேண்டும்!.

புலிகள் இருக்கும் பொழுது தமிழர்கள் மத்தியில் நல்லதொரு தலைமை இருக்க முடியலில்லை. புலிகளின் நவீன காட்டுமிராண்டி பயங்கரவாதத்தினால் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து மக்களின் அங்கீகாரம் பெற்ற நல்லதொரு தலைமை எதுவும் எழுச்சி பெற முடியவில்லை.

தமிழர்களுக்கான நேர்மையான தலைமை எழுச்சி பெறுவதுவும் புலிகளின் இருப்பும் ஒன்றுக்கொன்று எதிரான விடயங்களாக இருந்தன என்பது வெளிப்படையான ஓர் உண்மை. தமிழர்கள் மத்தியில் நல்லதொரு தலைமை உருவாக வேண்டுமென்றால் புலிகள் இல்லாமல் ஆக்கப்பட வேண்டியது கட்டாயமான முதல் நிபந்தனையாக இருந்தது. சிறீலங்கா அரசு புலிகளை ஏன் அழித்தது? எப்படி அழித்தது? என்ற விவாதத்துக்குள் இங்கே நான் இறங்க விரும்பவில்லை. ஆனால் புலிகள் அழிக்கப்பட வேண்டியது தமிழர்களுக்கு மிகமிக அவசியமான ஒரு தேவையாக இருந்தது. அது இப்போதுதான் நிகழ்ந்திருக்கின்றது.

இனித்தான் தமிழர்களுக்கான தலைமை தமிழர்களின் ஜனநாயக பூர்வமான அங்கீகாரத்துடன் சமூகத்திலிருந்து மேலெழ வேண்டும். அது தவிர்க்க முடியாதது. புலிகளின் அழிவால் தமிழ் மக்கள் தலைமையை இழந்து விடவில்லை. மாறாக, புலிகளாலேயே தமிழ் மக்கள் தலைமையை இழந்து நின்றார்கள்.

இனி மெல்ல மெல்ல உண்மையான நல்லதோர், நேர்மையான வல்லதோர் ஜனநாயக பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றதோர் தலைமை ஒன்று தமிழ் மக்களின் மத்தியிலிருந்து தலையெடுத்திடும் என நம்புவோம். அது தானாக நடக்கும் என்று இருக்காது வேண்டியன செய்வோம்.

இன்னொரு குழப்பம் தீர்க்க மீண்டும் உங்களுடன்

உங்கள் நண்பன் - தோழன்
அ.வரதராஜப்பெருமாள்

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top