என்ன செய்ய வேண்டும்.?
அன்பிற்கினிய யாழ் மாநகர மக்களே!
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பேரழிவுகளையும் இழப்புக்களையும், துன்பங்களையும், சுமந்து நிற்கிறீர்கள். இனியாவது எம் வாழ்வில் விடிவு கிட்டுமா என ஏங்கி நிற்கிறீர்கள்.
பயத்திலிருந்து விடுபடவும், ஐனநாயக சுதந்திரத்தை அனுபவிக்கவும், சமூக பொருளாதார அபிவிருத்தியைக் காணவும் விரும்புகிறீர்கள்.
எமது தமிழ்ப் பிரதேசங்களில் எமது அலுவல்களை நாமே பாhத்துக்கொள்ளும் விதமாக அரசியற் கட்டமைப்பைப்பொன்று ஏற்பட வேண்டுமென்று நீங்கள் நீண்டகாலமாகவே எதிர்பார்த்திருக்கிறீர்கள்.
எமது அண்டை நாடு இந்தியாவும் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகவும் தொடர்ச்சியாகவும் வலியுறுத்தி வருகிறது. இலங்கை அரசும் அதனை மேற்கொள்ளுவதாக வாக்குறுதியளித்துள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்களும் இன்னும் 180 நாள்களுக்குள் தமது சொந்தப் பிரதேசங்களில் குடியேற்றப்படுவார்கள் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு காரியங்களும் நிகழ்ந்தாலே மக்களின் மனக்காயங்களை சற்று ஆற்றுப்படுத்துவதாக இருக்கும்.
ஆனால், இவை மட்டும் போதாது. அரசியலில் ஐனநாயகம் நிலை நாட்டப்படுவதோடு வன்முறைக் கலாச்சாரம் ஒழிந்து போவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொதுவாகவே யாழ் குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துத் தடைகள்;, இடைய+றுகள் களையப்பட வேண்டும். யாழ் குடாநாட்டிலும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சுதந்திரமாக சென்று வருவதற்கான நிலைமைகள் ஏற்;படுத்தப்படவேண்டும். மின்சாரம், குடிநீர், சுகாதாரம், வீட்டுவசதி உள்ளிட்ட மக்களின் ஐPவாதார தேவைகளில் அதி கூடிய கரிசனை செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக யாழ் மாநகரசபை எல்லைக்குள் மிகப்பிரமாண்டமான பணிகள் இருக்கின்றன. மக்கள் கரடுமுரடான தமது வாழ்வை சுமுகமாகக் கொண்டு செல்வதற்கான வகையில் ஐனநாயகம் நிலைநாட்டப்படுவதோடு, சமூக பொருளாதார நடவடிக்கைகளும் துரிதப் படுத்தப்பட வேண்டும்.
யாழ் நகரத்தின் இடிபாடுகள், சிதைவுகளை நீக்கி குப்பை கூழங்கள் அகற்றப்பட்டு சுத்தமான நகரமாக யாழ் நகரம் மாற்றப்பட வேண்டும். தொற்று நோய்கள் பரவும் விதத்தில் உள்ள நீர் நிலைகள், தேக்கங்கள் சுத்திகரிக்கப் படவேண்டும். நுளம்புத் தொல்லையை நிரந்தரமாக இல்லாது ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தாறுமாறான பொலித்தீன் பாவனைகளினால் சூழல் மாசடைவதை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.
யாழ் நகரத்தின் வீதிகளை அழகுபடுத்தி, சூழல் பாதுகாப்புக்கு அனுகூலமாக விளங்கிய பல மரங்கள் அழிந்தும், அழிக்கப்பட்டும் உள்ளதை கவனத்துக்கெடுத்து பாரியளவிலான மரம் நடும் இயக்கம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படவேண்டும்.
ஏனைய நாடுகளின் முன்னுதாரணத்தை பின்பற்றி தெரு நாய்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் காப்பகங்களை ஏற்படுத்துவதன் மூலம் முறையற்ற வகையில் தெருநாய்களை அழிக்கும் நடவடிக்கைகளை கைவிடுவதுடன் அவற்றால் விளையும் தொல்லைகளையும் போக்கமுடியும்.
யாழ் நகரின் ஒழுங்கைகள் அனைத்தும் குன்றும் குழியுமாக காணப்படுகிறது. எவ்வளவு பணத்தைக் கொட்டியும் இந்த வீதிகளின் நிலை மாறவில்லை. தட்ப வெப்ப நிலைகளுக்கு நீண்டகாலம் தாக்குப் பிடிக்கக் கூடிய நிலையில் வீதிகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். யாழ் நகரில் உள்ள பாரிய குளங்களான ஆரியகுளம், புல்லுக்குளம் உள்ளிட்ட குளங்கள் சுத்திகரிக்கப் பட வேண்டும். திறந்தவெளி அரங்கு, முற்றவெளி உள்ளிட்ட பகுதி மக்களின் பாவனைக்குகந்தாக செப்பனிடப்பட வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் மிக்க வீதிகளில் பாதசாரிகளுக்கும் சைக்கிளில் செல்பவர்களுக்கும் வசதியாக வீதிகளின் இரு மருங்கும் பாதைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நகரின் மத்தியில் வர்த்தக நடவடிக்கைகளை விருத்தியாக்குவதற்கு புதிய வீதிகளை ஏற்படுத்தி முகப்பின்றி இருக்கும் காணிகளை வர்த்தக பயன்பாட்டுக்கு பொருத்தமானவையாக மாற்றுதல் வேண்டும்.
சிறுவர்கள், பொரியவர்களின் பொழுதுபோக்கிடங்கள் அமைக்கப்பட வேண்டும். மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் சிறு சிறு ப+ங்காக்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
திருநெல்வேலியிருந்து யாழ் நகருக்கு குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் தடையின்றி, தட்டுப்பாடின்றி அனைத்து மாநகரப் பகுதி மக்களுக்கும் கிடைக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
குடாக்கடலின் கரையோரப்பகுதிகளில் அமைந்துள்ள மீனவர் குடியிருப்புக்கள் புனரமைக்கப்படுவதுடன் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். புதிய குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
குறைந்த செலவிலும், சொற்ப இடத்திலும், அமைக்கப்படக் கூடிய புதிய வகை மலசலகூடங்கள் நிறுவப்பட வேண்டும்.
விவசாயிகள் தமது பொருள்களை சந்தைப்படுத்துவதில் இடைய+றுகள் களையப்பட வேண்டும். தொடர்ந்து யாழ் நகரப்பகுதியிலுள்ள காய்கறிச்சந்தை, மீன்சந்தை என்பன விரிவாக்கப்பட வேண்டும், நவீனமயப்படுத்தப்படவேண்டும் அத்துடன் போதிய இடவசதி ஏற்;படுத்தப் படவேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள், தரம் என்பன சீரானதாக இருக்கின்றனவா என்பதை கண்காணிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் வேண்டும்.
போசனசாலைகளில் உணவின் தரம் சுத்தம் என்பன தொடர்ந்து கண்காணிpக்கப்பட வேண்டும். பொது போசன சாலைகளின் கொல்லைப்புற சுகாதாரம் போதிய அவதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நடமாடும் நூலகங்களை உருவாக்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்கிவிக்க வேண்டும்.
சுத்தமான கட்டண கழிப்பிடங்கள் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள இடங்களில் நிறுவப்பட வேண்டும்.
துவிச்சக்கர வண்டி உட்பட புதிய வாகனத்தரிப்பிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
கழிவு நீர் வடிகால்கள் தங்குதடையின்றி தேக்கம் அடையாமல் விரைவாக அகற்றப்படும் வகையில் பொறிமுறைகள் ஏற்படுத்தப் பட வேண்டும். இதில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு அங்கிகள், கருவிகள் நவீன முறைகள் பிரயோகிக்கப்பட வேண்டும்.
நகரத்தைப் பொறுத்தவரை இவற்றையொத்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியிருக்கிறது. பாரிய அழிவைச் சந்தித்த நகரம் என்ற வகையிலும் மாநகரசபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இல்லாதிருந்ததினாலும், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சீரான தொடர்புகளை இழந்தமையாலும் யாழ் மாநகரசபை பெரும் சவால்களை எதிர்நோக்கி நிற்கின்றது.
இலங்கையின் இரண்டாவது பெரிய நகரம் சோபை இழந்து காணப்படுகின்றது. இது புனர்ஜென்மம் பெறவேண்டும். மக்களே! உங்களின் பங்களிப்புடன் தான் நாங்கள் மாற்றங்களை காணலாம்.
எதிர்வரும் யாழ் மாநகரசபைத் தேர்தலில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியினராகிய நாம் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து நிற்கிறோம்.
பத்மநாபா ஈபிஆர்எல்எவ்.
0 விமர்சனங்கள்:
Post a Comment