ஜனாதிபதித் தேர்தல் வரை காத்திருக்கவேண்டாம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வரும்வரை காத்திராமல் அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
ஜனாதிபதி எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் என்ன என்பது தமக்குத் தெரிந்துள்ளபோதிலும், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குக் காத்திராமல் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டியது அவசியமெனவும் அவர் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அபிவிருத்தி மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழு முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சரியான பாதையில் செல்லவேண்டுமெனப் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
“தமிழ் மக்களை மாத்திரம் நாம் கூறவில்லை, தமிழ் பேசும் மக்களையும், சிங்களவர்களையும் இணைத்தே அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும்” என சிறிகாந்தா குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தாது ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு விடயங்கள் இருப்பதாகவும், அவற்றின் ஊடாக சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்கவேண்டுமெனவும் அவர் கூறினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.ஏல்.எவ். உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட கூட்டணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது எனப் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய சிறிகாந்தா, தேசியப் பிரச்சினைக்கான தீர்வைப் பிழையாக விளங்கிக் கொண்டமையாலேயே தற்பொழுது பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment