ஒரு பில்லியன் பவுண்ட் பணத்திற்காக மைக்கல் ஜெக்சன் படுகொலை செய்யபட்டதாக அவரது சகோதரி குற்றச்சாட்டு
ஒரு பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பணத்திற்காக உலக பொப் சக்கரவர்த்தி மைக்கல் ஜெக்ஜன் படுகொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரி லா டோயா குற்றம் சுமத்தியுள்ளார்.
லா டோயாவின் இந்த அறிக்கையின் மூலம் மைக்கல் ஜெக்சனின் மரணம் குறித்து புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மைக்கல் ஜெக்சன் உயிருடன் இருப்பதனைவிடவும், இந்த உலகை விட்டு நீங்கினால் பெறுமதியானவர் என்பதனை அறிந்த சிலரே இந்தப் பாதகச் செயலை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மைக்கல் ஜெக்சனது மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை உயரதிகாரி கருத்து வெளியிட்டு இரண்டு தினங்களின் பின்னர் ஜெக்சனின் சகோதரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மித மிஞ்சிய மருந்து பாவனையினால் மைக்க ஜெக்சன் உயிரிழந்ததாக வெளியாகும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதில் ஏதோ சூழ்ச்சித் திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை ஒருவர் மேற்கொண்டுள்ளார் என நான் கருதவில்லை. இதனை குழு குழு திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைக்கல் ஜெக்சனின் இசை சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபமீட்ட முயற்சித்த சில சதிகாரர்களே அவரை படுகொலை செய்திருக்க வேண்டுமென அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
மைக்கல் ஜெக்சனின் கழுத்து மற்றும் கைகளின் பல இடங்களில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது சகோதரரை படுகொலை செய்த நபர்களை கண்டு பிடிக்கும் வரையில் ஓயப் போவதில்லை என லா டோயோ தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment