சாப்பாட்டை விமர்சித்த கணவனை அடித்து, உதைத்த மனைவி
மியாமி: சாப்பாடு சரியில்லை என கூறிய கணவனை அடித்து, உதைத்து பின்னர் கொன்றுவிடுவேன் என மிரட்டிய அமெரிக்க மனைவியை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போனிடா ஸ்பிரிங்ஸ் பகுதியில் வசிப்பவர் ரிச்சர்ட் ஜோன்ஸ்(71). இவரது மனைவி மிரிடித் முல்கஹி (66). இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டுக்கு ஜோன்ஸ் சாப்பிட வந்தார். அப்போது மனைவி அவருக்கு பிரட்டும், உருளை கிழங்கு ரோஸ்ட்டும் செய்து வைத்திருந்தார். சாப்பிட உட்கார்ந்த ஜோன்ஸ், பிரட் கருகி இருப்பதையும், உருளை கிழங்கு வேகாமல் இருப்பதையும் பார்த்து விட்டு, அதை விமர்சனம் செய்துள்ளார்.
பின்னர் தனது பெட்ரூமுக்கு வந்துள்ளார். தனது சமையலை கணவர் விமர்சித்ததை முல்கஹியால் தாங்கி கொள்ள முடியவில்லை.
பெட்ரூம் வந்த முல்கஹி அவர் மீது தொலைபேசியை எடுத்து எரிந்துள்ளார். அப்படியும் அவரது ஆத்திரம் தீரவில்லை. அவரை அடித்து உதைத்துள்ளர். உன்னை கொல்ல போகிறேன் என கூறி கணவரது கழுத்தை பிடித்து நெறித்துள்ளார்.
அவரிடம் இருந்து ஒருவழியாக தப்பித்த ஜோன்ஸ் போலீசில் புகார் கொடுத்தார். இதையடு்த்து போலீசார் அந்த கோபக்கார மனைவியை கைது செய்தனர்.
நல்லவேளை, நம்மூர்ல இந்த அளவுக்கு கொலை வெறியுடன் மனைவியர் கிடையாது..
0 விமர்சனங்கள்:
Post a Comment