புலிகள் ஆயுதங்களை கைவிட மாட்டார்கள் என்பது எனக்கு அப்போதே தெரியும்
ராம்:- நீங்கள் 2005 இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது இந்த மோதல்கள் குறித்த உங்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்தது. 2005 தேர்தல் விஞ்ஞாபனத்தில் (மஹிந்த சிந்தனையில்) நீங்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தீர்கள். “எமது நாட்டின் சுதந்திரம் தான் பிரதானமானது.
எந்தவொரு பிரிவினைவாதத்துக்கும் நான் இடமளிக்கப் போவதில்லை. எமது நாட்டில் ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாட்டில் யாரும் ஈடுபடவும் நான் இடமளிக்கப் போதில்லை. எல்லா இன, சமய தனித்துவங்களையும் நான் மதிக்கின்றேன்.
யாருக்கும் எதிராகப் படைகளைப் பிரயோகிக்கப் போவதில்லை. தனிநபர்களிலும், சமூகத்தினதும் சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கூடிய புதிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவேன்” அந்தக் கொள்கை விளக்க உரையில் நீங்கள் இன்னும் ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்டியிருந்தீர்கள்.
உங்கள் முயற்சிகளின் அடிப்படைத்தளமாக ‘பிரிக்கப்படாத ஒரு நாடு, தேசிய நல்லிணக்கம், மற்றும் கெளரவமான சமாதானம்” என்பனவே அவை. இந்த வகையில் நீங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது உங்களுடைய உண்மையான எதிர்பார்ப்பு என்ன? ஒரு தாக்குதலில் நீங்கள் ஈடுபட்ட போது, அது சம்பந்தமான வேதனை, உங்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லையே?
ஜனாதிபதி:- பயங்கரவாதம் பற்றி நான் மிகவும் தெளிவாக இருந்தேன். தமிழர்களின் உணர்வுகளை அடக்க வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்தே நான் பயங்கரவாதம் பற்றி மிகத் தெளிவாகவே இருந்தேன்.
எனவேதான் நான் வெற்றியடைவேன் என்பதை தெரிந்து கொண்டதும் கோத்தாபயவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொண்டேன். ஒரு போர்க்குணமுள்ள தொழிற்சார் படைவீராக 20 வருடங்கள் இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்த அவர் நவம்பர் 25, 2005 இல் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
1987 புலிகளுக்கு எதிராக வடமராட்சி இராணுவ நடவடிக்கையிலும், 1990 இல் யாழ் குடாநாட்டை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கையிலும், யாழ்ப்பாணக் கோட்டையை எல். ரி. ரி. ஈ. இன் பிடியில் இருந்து மீட்பதற்கான இராணுவ நடவடிக்கையிலும் அவர் பிரதான பங்கு வகித்தவர்.
நான் அவரிடம் கூறினேன், ‘நீங்கள் திரும்பிப் போக முடியாது. இங்குதான் இருக்க வேண்டும் என்று. அதைப் போலவே எனது படைத் தளபதிகளையும் நான் தெரிவு செய்தேன். இவர்கள் எல்லோருமே அதற்குத் தயாராக இருந்தனர்.
பின்னர் புலிகளுக்கு தூது அனுப்பினேன். “வாருங்கள் நாங்கள் பேசுவோம், கலந்துரையாடுவோம்” என்று “நான் பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சி செய்தேன். நான் பெருமளவுக்கு நடைமுறைச் சாத்தியமானவனாகவே இருந்தேன். ‘நீங்கள் உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் எல்லோரும் ஏன் ஒரு தேர்தலில் போட்டியிடக் கூடாது?” என்று அவர்களிடம் கேட்டேன். இப்போது நீங்கள் ஆயுதம் ஏந்தியவர்களாக உள்Zர்கள். உங்களை தெரிவு செய்யுமாறு மக்களைக் கேளுங்கள். மாகாண சபைக்குத் தேர்தல் நடத்துவோம். பின்னர் நாம் கலந்துரையாடுவோம்.
அப்போது மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு குழுவோடு நான் பேச்சுவார்த்தை நடத்தக் கூடியதாக இல்லை. தற்போது ஆயுதங்கள் ஏந்தியிருப்பவர்களோடு என்னால் பேசமுடியாது” என்று அவர்களுக்கு சொன்னேன். ஆனால் பிரபாகரன் பெரும் தவறிழைத்துவிட்டார். நான் நடைமுறைச்சாத்தியமானவன், சாத்தியக்கூறான மனிதன் என்று அவரும் கூறியிருந்தார்.
லலித் வீரதுங்க:- ஜனாதிபதி 2005, நவம்பர் 19 இல் பதவியேற்றார். அப்போது அவர் தனது முதலாவது உரையை நிகழ்த்திய போதே அந்த மனிதனுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் நவம்பர் 27 இல் பிரபாகரனின் மாவீரர் தின உரை வெளியானது. அப்போதுதான் அவர் ஜனாதிபதி நடைமுறைச் சாத்தியமான, சாத்தியக்கூறுகள் மிக்க மனிதர் என்று குறிப்பிட்டிருந்தார்.
சமாதானச் செயற்பாடுகள் குறித்த புதிய ஜனாதிபதியின் அணுகுமுறையை தனது இயக்கம் சற்று பொறுத்து அவதானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘நடைமுறைச்சாத்தியமான அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு யதார்த்தவாதியாக ராஜபக்ஷ தென்படுகின்றார்’ என்று பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார்.
“நான் கடைசி எல்லை வரை செல்லவும் தயாராக இருக்கிறேன்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததையும் பிரபாகரன் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அதற்குப் பின் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தமது இராணுவ சகாக்களுக்காக உணவுகளை எடுத்துச் சென்ற நிராயுதபாணிகளான 13 படைவீரர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். இவ்வாறுதான் இது ஆரம்பமானது.
ஜனாதிபதி:- அப்போது கூட நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து வைத்திருந்தேன். அதற்குப் பிறகுதான் என்னுடைய பாதுகாப்பை நான் ஆரம்பிதேன் என்று என்னால் குறிப்பிடலாம். பின்னர் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோதாபய கூறினார். அப்போதுதான் எல்லாமே திட்டமிடப்பட்டது.
“உங்களுக்கு என்ன தேவை? தயாராகுங்கள்” என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால் அதற்குப் பின்னரும் நான் அவர்களுக்குப் ( எல். ரி. ரி. ஈ) பின்னால் வேண்டுகோள் விடுத்தவாறே இருந்தேன். நான் புலிகளை எச்சரித்தேன். “இவ்வாறு நடந்து கொள்ளாதீர்கள் என்னை ஒரு சுவரை நோக்கித் தள்ளாதீர்கள்” என்றேன்.
லலித் வீரதுங்க:- பின்னர் அவர்களின் தலைவர் ஒருவரோடு பேச்சுவார்த்தை நடத்த என்னை நீங்கள் அனுப்பினீர்கள்.
ஜனாதிபதி:- நான் இவரை அனுப்பினேன். பிறகு கொழும்புச் செட்டி தமிழ் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதியும் எனது அமைச்சரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் இந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயையும் அனுப்பினேன். அவர் 2008 ஏப்ரல் 6 இல் நடத்தப்பட்ட புலிகள் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
லலித் வீரதுங்க:- நான் 2006 இல் பல சோதனைச்சாவடிகளைக் கடந்து, சோதனைகள் எதுவும் இன்றிச் சென்றேன். ஜனாதிபதி என்னிடம் சொன்னார். “நீங்கள் போங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டாம். பின்னர் அவர்களுக்குக் கூறினார். நான் ஒருவரை அனுப்பியுள்ளேன். /சீ8மி!x அவரைக் கண்டு பிடிக்கக்கூட முடியாது” என்று.
ஜனாதிபதி:- நான் பின்னர் எனது பாதுகாப்புத் துறையினரை அழைத்தேன். “என்னால் ஒருவரை அங்கு அனுப்ப முடியுமென்றால், உங்களது பாதுகாப்பு நிலை என்ன” என்று அவர்களைக் கேட்டேன். பின்னர் பல மாதங்கள் கழிந்துதான் அவர்களிடம் சொன்னேன். “லலித் வீரதுங்கதான் நான் அங்கு அனுப்பிய நபர். அது உங்களுக்குத் தெரியுமா?” என்று.
லலித் வீரதுங்க:- ஜனாதிபதி அந்தளவுக்கு சென்றார்.
ராம்:- பலவீனத்தை அறிந்து கொள்ளவா?
லலித்:- இல்லை! பேச்சுவார்த்தை நடத்த.....
ஜனாதிபதி:- பேச்சுவார்த்தை நடத்தவும் பலவீனத்தை அறிந்து கொள்ளவும்தான். பின்னர் நான் ஜெயராஜை அனுப்பினேன். சில உள்வீட்டு உண்மைகளை அவர் சிங்களத்தில் அவர்களிடம் சொன்னார். ஆனால் அது அவர்களுக்குப் புரிந்தது (இதே வழியைத் தொடர்ந்தால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்பதுதான் அது)
ராம்:- பின்னர் மாவில் ஆறு சம்பவம் இடம்பெற்றது.
ஜனாதிபதி:- அதுதான் அவர்கள் எனக்குப் பச்சைவிளக்கு காட்டிய நேரம்.
ராம்:- ஆனால் அதற்கிடையில், ஆகஸ்ட் 2006 இல் நீங்கள் நன்கு தயார் நிலையில் இருந்தீர்கள் இல்லையா?
ஜனாதிபதி:- ஆம். ஆனால் அதற்கு முன் அவர்கள் இராணுவத் தளபதியைக் கொலை செய்ய முயன்றார்கள்.
லலித்:- 2006 ஏப்ரலில் அவர்கள் இராணுவத் தளபதியைக் கொலை செய்ய முயன்ற போது, ஜனாதிபதி சொன்னார். அவர்களை அதைரியப்படுத்தும் வகையில், ஒரு சுற்று குண்டு வீச்சு நடத்திவிட்டு நிறுத்துங்கள் என்று.
ஜனாதிபதி:- ஆம் நான் ஒருமுறை மட்டுமே தாக்குமாறு கூறினேன். நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். பேச்சுவார்த்தை மூலம் ஒரு வழியைக் காண நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.
லலித்:- ஜெனீவாவிலும், ஏனைய இடங்களிலும் தொடரான பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆனால் அவர்கள் பேசக் கூட விரும்பாத நிலையிலேயே இருந்தனர்.
ஜனாதிபதி:- எனவே இந்த இராணுவ நடவடிக்கையானது இந்த ஒரு கலந்துரையாடலோ அல்லது காரணமோ இன்றி ஏற்பட்டதல்ல. ஆனால் ஆரம்பம் முதல் இராணுவ நடவடிக்கை என்ற தெரிவுக்கும் நான் தயாராகவே இருந்தேன். எனக்கு அனுபவம் இருந்ததால் நான் இதை தெரிவித்திருந்தேன்.
அவர்கள் ஒருபோதும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைகளுக்கு வரப்போவதில்லை என்பதை அனுபவ ரீதியாக நான் அறிந்து வைத்திருந்தேன்.
லலித்:- இந்த இடத்தில் ஜனாதிபதி எரிக் சொல்ஹெய்முடன் நடத்திய ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலையும் நான் கூற விரும்புகிறேன். அப்போது நானும் இருந்தேன். 2006 மார்ச் மாதமளவில் சொல்ஹேம் ஜனாதிகதியைக் காண வந்தார். ஏனைய விடயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்.
“பிரபாகரன் ஒரு இராணுவ மேதை. நான் அவர் செயற்படுவதைப் பார்த்துள்ளேன்” என்பதோடு அவர் பற்றி இன்னும் பலவிடயங்களை சொல்ஹெய்ம் கூறினார். அப்போது ஜனாதிபதி கூறினார். “அவர் வடபகுதிக் காட்டில் இருந்து வந்தவர்.
நான் தென்பகுதிக் காட்டிலிருந்து வந்தவன் யார் வெல்கிறார்கள் என்பதைப் பார்த்து விடுவோம்” என்று. இது மிகவும் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு கூற்றாக இருந்தது. பின்னர் ஜனாதிபதி சொல்ஹெய்மை நியூயோர்க்கில் சந்தித்த போது, அவருடன் பேசிக் கொண்டிருந்த போது சொல்ஹெய்மின் ‘இராணுவ மேதைக்” கதையையும் நினைவுபடுத்தினார். அப்போது கிழக்கு மாகாணம் முற்றாக மீட்கப்பட்டிருந்தது.
“வடக்கிலும் இதுதான் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று ஜனாதிபதி கூறினார்.
ராம்:- புலிகள் பலவீனமானவர்கள் என்பதையும், ஏதோ ஒருவகையில் அவர்களுக்குள் ஊடுருவி அவர்களைத் தாக்க முடியும் என்பதையும் நீங்கள் எப்போது முதன் முதலாகத் தெரிந்து கொண்டீர்கள்?
ஜனாதிபதி:- இலங்கை இராணுவத்துக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்து, தேவையானவற்றை எல்லாம் அவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு சரியான அறிவுறுத்தல்களையும் வழங்கினால். நிச்சயம் அவர்களால் புலிகளைத் தோல்வியடையச் செய்யலாம் என்பதை ஆரம்ப முதலே நான் அறிந்து வைத்திருந்தேன். அந்த உணர்வு ஆரம்பம் முதலே எனக்கிருந்தது.
ஏனெனில் புலிகள் வெளிக்காட்டிக் கொண்டிருப்பது யதார்த்தமல்ல என்ற உணர்வே எனக்கிருந்தது. இது ஒருவகையில் தவறானது. அவர்களிடம் ஆட்கள் இருந்தார்கள். ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் இலங்கையை மட்டுமல்ல, தென் இந்தியாவைக் கூட தாக்கயிருக்கலாம். அவர்கள் சேர்த்து வைத்திருந்த ஆயுதங்கள் இலங்கைக்கு எதிராக மட்டுமே உரியதாக இருந்திருக்க முடியாது.
எமது படையினர் கண்டுபிடித்துவரும் ஆயுதங்களின் தொகை நம்பமுடியாததாக உள்ளது. எமது புலனாய்வு பிரிவினர் கூறினார்கள். “அவர்களிடம் 15 ஆயிரம் போராளிகள் மட்டுமே உள்ளனர்” என்று. ஆனால் எனக்கும் தெரியும் இது உண்மையான தொகை அல்ல என்பது.
நான் ஒரு தகவல் மூலத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. புலிகளிடம் இதைவிடக் கூடுதலான ஆள்பலம் இருப்பதை நான் நன்கு அறிந்து வைத்திருந்தேன். நான் எப்போதுமே புலிகளைக் குறைத்து மதிப்பிட்டது கிடையாது.
ராம்:- ஆகவே அவர்கள் உலகில் மிகவும் கொடிய, மிகவும் சக்திவாய்ந்த பயங்கரவாதிகள் என்று நீங்கள் கூறுகின்aர்கள்.
ஜனாதிபதி:- ஆம் மிகவும் கொடிய, உலகின் மிகவும் பணக்கார பயங்கரவாத அமைப்பு. நல்ல ஆயுதங்களும், நல்ல பயிற்சியும் அவர்களிடம் இருந்தன.
ராம்:- அவர்களின் இறுதி மூலோபாயம் ஏதுவாக இருந்திருக்கும் என நீங்கள் கருதுகின்aர்கள்? பிரபாகரன் மற்றும் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களோடு அந்தச் சிறிய கரையோரப் பகுதிக்குள் முடங்கிக் கிடந்தார். இது உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் அவர்கள் அங்கு எதிர்பார்த்தது என்ன? பத்தி எழுத்தாளராகப் பணிபுரியும் டீ. பி. எஸ். ஜெயராஜ் ஒரு துணிகரமான எதிர்த்தாக்குதலுக்குக் காத்திருந்ததாக எனக்கு கூறுகின்றார்.
ஜனாதிபதி:- நான் நினைக்கிறேன் அவர்கள் தப்பிச் செல்லும் எண்ணத்தில்தான் இருந்தார்கள். என்றே நான்இறுதிக் கட்டத்தில் யாரோ ஒருவர் வந்து தங்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்வார்கள் என்று எண்ணியிருந்தார்கள். இல்லையேல் அவர்கள் அங்கு சென்றிருக்க மாட்டார்கள்.
அவர்களிடம் கடற்படைத் தளம் இருந்ததால், மிக நெருக்கமாகக் கப்பல் ஒன்றைக் கொண்டுவரக் கூடிய ஒரே இடம் அதுவாகத்தான் இருந்தது. ஒரு நீர்மூழ்கியைக் கூடக் கொண்டுவரக் கூடிய ஒரே இடம் அதுதான். அவர்கள் தங்களுக்கான சிறந்த இடத்தையே தெரிவு செய்தார்கள்.
ஒருபுறம் கடல் மறுபுறம் கடல் ஏரி இடையில் ஒரு சிறிய ஒடுங்கிய நிலப்பரப்பு. ஆனால் இங்கு இன்னும் ஒன்றையும் கூற வேண்டும். உண்மையில் அந்த இடத்தைத் தெரிவு செய்தவர்களும் அவர்கள் அல்ல.
ஆயுதப் படையினர் தான் அந்த இடத்தை அவர்கள் தெரிவு செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தினார்கள். யுத்த சூனிய வலயங்களைப் பிரகடனப்படுத்தியவர்கள் ஆயுதப் படையினர்தான். கிளிநொச்சிக்குப் பிறகு இந்த வலயங்களைப் பிரகடனப்படுத்தி அங்கு செல்ல வைத்தார்கள்.
இவை ஐ. நா. வால் குறிப்பிடப்பட்ட இடங்கள் அல்ல; அல்லது வேறு எவராலும் குறிப்பிடப்பட்டதுமல்ல. அவை எமது ஆயுதப்படைகளால் குறிப்பிடப்பட்டன. அவர்கள் ஒரு மூலையில் முடக்குவதற்காக எல்லாமே எமது படையினர் தீட்டிய திட்டங்கள்தான்.
இராணுவம் சகல முனைகளிலும் முன்னேறி வந்தது. எனவே எமது மூலோபாயங்கள் மூலமாகத்தான் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டார்கள் என்றுதான் நான் கூறுவேன்.
லலித்:- கிளிநொச்சி 2009, ஜனவரி முதலாம் திகதி கைப்பற்றப்பட்டது. எல்லா இராணுவ நடவடிக்கைகளும் மே மாதம் 19ல் பூர்த்தியானது. எனவே வெளியேறுவதற்கு அவர்களுக்கு போதியளவு கால அவகாசமும் இருந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment