மீண்டும் தலைதூக்கியுள்ள மரணதண்டனை விவகாரம்!
இலங்கையில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்க மட்டத்தில் ஆலோசனைகள் நட த்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.
மரண தண்டனையென்பது எமது நாட்டுக்குப் புதி யதொன்றல்ல... மன்னராட்சிக் காலத்திலும் மரண தண்டனை நடைமுறையில் இருந்துள்ளது. இங்கிலா ந்து நாட்டவரால் எமது நாடு முழுமையாக ஆக்கிர மிக்கப்பட்டு அந்நாட்டு ஆட்சியாளர்களால் ஏற்படுத் தப்பட்ட சட்டங்கள் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியின்போதும் மரணதண் டனை நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது.
அந்நியரின் ஆட்சியிலிருந்து இலங்கை முழுமை யான சுதந்திரம் பெற்ற காலப் பகுதிக்குப் பின்னரும் மரணதண்டனை நடைமுறையில் இருந்தே வந் துள்ளது. ஆனால் 1976ம் ஆண்டுக்குப் பின்னர் எமது நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1976ம் ஆண்டுக்குப் பின்னர் மரணதண்டனைத் தீர் ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகள் பலர் தொடர்ச்சி யாகச் சிறைவாசம் அனுபவித்து வந்துள்ளனர். மரண தண்டனைத் தீர்ப்புக்குள்ளான மேலும் பலர் அத்தீர்ப் புக்கெதிராக மேன்முறையீடு செய்து அத்தண்டனை யானது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
ஆயுள் தண்டனைக் கைதிகளில் பலர் தங்களது தண் டனைக் காலப் பகுதியில் நன்னடத்தை காரணமாக வும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாலும் சிறைவாச காலம் குறைக்கப்பட்டு விடுதலையாகிச் சென்றுள்ள னர்.
எமது நாட்டில் 1976ம் ஆண்டுக்குப் பின்னர் எவருக்குமே மரண தண்டனை நிறைவேற்றப்படாத போதிலும் நீதிமன்றங்கள் மரணதண்டனைத் தீர்ப்பை அவ்வப்போது வழங்கியே வருகின்றன.
மரண தண்டனைத் தீர்ப்பு நிறைவேற்றப்படுவது இலங்கையின் குற்றவியல் சட்டத்திலிருந்து நீக்கப்பட வில்லையென்பதனாலேயே எமது நீதிமன்றங்கள் அத்தீர்ப்பை இன்று வரை வழங்கி வருகின்றன.
இங்குள்ள சிறைச்சாலைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சுமார் 350 கைதிகள் இன்று உள்ளனர். மரணதண்டனையை நிறைவேற்றுவதென்ற தீர்மானம் இலங்கையில் எடுக்கப்படுமானால் இக் கைதிகள் தூக்கிலிடப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
இலங்கையில் மரண தண்டனையை அமுல் செய் வதை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண் டுமென்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளிலுமிருந்து நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மனித உரிமை அமைப்புகள், மத நிறுவன ங்கள் போன்றன மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
எந்தவொரு உயிரையும் அழிப்பது பாவமான செய லாகுமென்ற கோட்பாட்டை இந்து, பெளத்த தர்ம ங்கள் வலியுறுத்துவதன் காரணமாகவே இலங்கை யில் மரண தண்டனைக்கு எதிரான அபிப்பிராயங்கள் பலதரப்பிலும் எழுகின்றன.
உலகளாவிய ரீதியில் எடுத்து நோக்குவோமானால் மரணதண்டனை நிறைவேற்றுவதை ஏராளமான நாடுகள் இல்லாதொழித்து விட்டன. ஒருசில நாடு கள் மட்டுமே மரணதண்டனையை இன்னமும் நடை முறைப்படுத்தி வருகின்றன.
மரணதண்டனை விவகாரமானது எதிரும்புதிரு மான இருவேறு கொள்கைகளுக்கு உட்பட்டதாகும்.
‘நீதிமன்றத் தீர்ப்பானது குற்றவாளியைத் தண்டிப்ப தாக அமைந்துவிடக் கூடாது. அவனைச் சீர்திருத்தி நற்பிரஜையாக மாற்றுவதற்கான வாய்ப்பை அளிப் பதாக அமையவேண்டும். சிறைவாசமானது குற்றவா ளியைச் சீர்திருத்தும் காலப் பகுதியாக இருக்க வேண்டும். மரண தண்டனையென்பதன் பேரில் குற் றவாளியொருவனின் உயிரைப் பறிப்பதனால், அவன் திருந்தி வாழ்வதற்கான உரிமை பறிக்கப்படுகிறது’ என்பது மனித உரிமை அமைப்புகளின் நிலைப்பா டாகும்.
மரண தண்டனையை ஆதரிப்போரின் வாதமோ வேறு விதமாக உள்ளது. ‘கொடூரமான குற்றம் புரிந் தோர் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்ட னையானது ஏனையோருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்’ என்கின்றனர் மரண தண்டனையை ஆத ரிக்கும் தரப்பினர்.
இவ்வாறான இருவேறு முரண்பட்ட கருத்துகளால் மரணதண்டனை விவகாரம் உலகெங்கும் சர்ச்சைக் குரியதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
எமது நாட்டில் குறித்ததொரு காலப் பகுதிக்குள் மோசமான கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வந்த தனாலேயே மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது மேலெ ழுந்து வந்துள்ளது. கொடிய குற்றச் செயல்களை நாட்டில் கட்டுப்படுத்த வேண்டுமானால் மரணதண் டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லையென பரவலாக குரல்கள் எழுகி ன்றன. எனவேதான் இவ்விவகாரம் அரசாங்க மட்ட த்தில் அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு இறுதியில் மனிதநேயமே வென்றுள்ளது. மரண தண்டனை விடயம் கிடப்பில் போடப்பட்டு வந்துள்ளது.
இவ்விவகாரம் தற்போது மீண்டும் தலைதூக்கியுள் ளது. மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவ தென்பது அரசாங்க மட்டத்திலோ அன்றி சட்டத்தின் கரங்களிலோ மாத்திரம தங்கியிருப்பதாக அமைந்து விடலாகாது.
உளவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் போன்றோரின் கருத்துக்களெல் லாம் இங்கே பெறப்படுவது அவசியமாகிறது. அதன் பின்னரே உறுதியான முடிவொன்று எட்டப்படலா மென எதிர்பார்க்கப்படுகிறது.
தான் இழைத்த குற்றத்தை எண்ணி வருந்தி, திரு ந்தி வாழ்வதற்கு ஆசைப்படுகின்ற மனிதன் ஒருவ னுக்கு அதற்கான வாய்ப்பை அளிப்பது மிகப் பெரும் தர்மம் ஆகும். எந்தவொரு மனிதனும் பிறப்பிலேயே குற்றவாளியாகப் பிறப்பதில்லையென்ற யதார்த்தத் தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய விடயம் இதுவாகும். எனவேதான் முடிவு காண முடியாத தாகியுள்ளது மரணதண்டனை விவகாரம்!
0 விமர்சனங்கள்:
Post a Comment