பிரான்ஸில் எந்தவொரு நிதி வசூலிப்பிலும் ஈடுபடவில்லை
பிரான்ஸ் வாழ் தழிழ் மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
எம்மால் ஒட்டப்பட்ட வீரமக்கள் தின நினைவு சுவரொட்டிகள் சில வியாபார ஸ்தாபனங்களினால் கிழிக்கப்பட்டதாகவும் இதைக்காரணம் காட்டி சில விஷமிகள் எமது கழகத்தின் பெயரைக் கூறி சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட கடை உரிமையாளர்களிடம் பணம் வசுலிக்க முயற்சி செய்ததாகவும் புலி பினாமி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழக பிரான்ஸ் கிளை தோழர்கள் தமது சொந்தப்ணத்திலேயே இது வரை செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் நாம் வியாபார ஸ்தாபனங்களிடமோ அல்லது தனி நபர்களிடமோ பணம் கேட்டுமிரட்டவோ வற்புறுத்தவோ இல்லை.
எமது கழகத்தோழர்கள் வன்னியில் இடம் பெயர்ந்து வாழும் எமது தமிழ் மக்களுக்கு ஆற்றும் பணி நீங்கள் அறிந்ததே எனவே எமது செயற்பாடுகளை பிரான்ஸில் முடக்குவதற்காகவும் எமது பெயரை கெடுப்பதற்காகவும் சில குழுக்களுடன் சில விஷமிகளும் இணைந்து இப்படியான கிழ்த்தரமான செயற்பாடுகளில் எமது பெயரைக் கூறி ஈடுபடுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் எமக்கும் இந்த விஷமிகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வன்னியில் மக்கள் மிகவும் துயருற்று எம்மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ள இக்காலகட்டத்தில் லாச்சப்பல் சண்டித்தனமும் குழு மோதல்களும் வெளிநாட்டினரிடையே தமிழர்களைப்பற்றிய தவறான கருத்தையே வலுப்பெறச்செய்யும் எனவே எமது தமிழ் மக்களே இனியாவது நாம் ஒண்றிணைவோம் இலங்கையில் துயறுற்று தவிக்கும் எம்மக்களுக்காக இதய சுத்தியுடன் செயற்படுவோம் வேறுபாடுகளைக்களைந்து இனியாவது ஒரு விதி செய்வோம்.
எமது கழகத்தின் பெயரைக்கூறிக்கொண்டு உங்களிடம் வற்புறுத்தி பணம் எவராவது கேட்டால் உடனே ploteplote@ymail.com என்ற ஈமெயில் முகவரியுடன் கொண்டு அறியத்தாருங்கள்.
வெளியீடு- தமிழீழ மககள் விடுதலை கழகம்
பிரான்ஸ் கிளை (PLOTE)
0 விமர்சனங்கள்:
Post a Comment