அன்புடன் ஆனந்தசங்கரியண்ணைக்கு ஒரு மடல்… (வாசகர் ஆக்கங்கள்)
மதிபிற்குறிய திரு.ஆனந்த சங்ரியண்ணைக்கு.. தங்களவு ஆற்றலும் அனுபவமும் எனகில்லை. இருந்தாலும் விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு செய்தவர்களில் நானுமெருவன் என்றவகையில் தங்களிடம் சில கேள்விகளுக்கு விடைகான ஆசைப்படுகின்றேன். பாசிசவழியில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் அதன் வழியிலேயே இன்று அழிக்கப்பட்டுள்ளது இதனை நாம் அனைவரும் எதிர்பார்த்ததுதான்
பாசிசவாத புலிகள் அழிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தமிழர்களுக்கான ஒரு தனித்த்துவமான அரசியல் தலைமை உருவாக்கப்படவேண்டுமென என்போன்றவர்களும் மக்களும் எதிர்ப்பார்த்தார்கள் எனெனில் தமிழ் கட்சிகளில் ஒரு பகுதியினர் புலிகளின் முகவரியிலும் இன்னுமொரு பகுதியினர் அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்ப்பட்டுக் கொண்டிருப்பதால் தமிழரின் தனித்துவம் அழிந்துகொண்டிருப்பதாகவே நாம் கருதினோம் அந்தவகையில் தங்களின் தலைமையின் கீழ் (தமிழர்விடுதலை கூட்டணிஇ புளொட்இ ஈ பி ஆர் எல் எப்) போன்ற கட்சிகள் இனைந்து உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை ஓர் அர்த்தபுஸ்டியான செயலாகவே கருதினோம் அதேபோல் மக்களும் இக்கூட்டணியை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றார்கள்.
இந்நிலையில் கிழக்குமாகாண தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிட்ட தங்களது கூட்டணி பெரும்பான்மையான வெற்றிகிடைக்காவிட்டலும் புலிகளின் அச்சுறுத்தகளுக்கு மத்தியில் இக்கூட்டணிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைத்ததை யாரும் மறுக்கமுடியாது ஆனால் வடக்கிற்கான தேர்தல் அறிவிப்பு வந்ததும் கூட்டணி மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது இதற்கான காரணத்தை யாரும் தெளிவாகக்கூற முன்வரவில்லையென்றாலும் மக்கள் எதிர்பார்த்தது யாழ்மாவட்டத்தில் தமிழர்விடுதலைக் கூட்டணி சூரியன் சின்னத்திலும் புளொட் வவுனியா மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுவீர்களென நினைத்தோம் காரணம் கடந்தகாலங்களில் இரண்டு கட்சிகளுமே இவ்விரண்டு மாவட்டத்திற்கான மக்கள் சேவையில் அனுபவமுள்ளவர்கள் என்கின்றவகையில் அனால் மக்களின் எதிர்பார்புக்கு மாறாக இரண்டு கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தல் விண்ணப்பம் படிவம் தாக்கல்செய்து மக்கள் மனதிலொரு குழப்பமான சூழ்நிலையை தோற்றுவித்தது மாத்திரமின்றி கூட்டணித் தர்மத்தை மீறும் நடவடிக்கையில் தங்கள் கட்சியுறுப்பினர்கள் ஈடுப்பட்டதை தடுக்கமுடியாமல் போனது ஏன்?
கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் எந்தெந்த மாவட்டங்களில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றதோ அவர்களுக்கு வாய்ப்புகொடுத்து அவர்களின் வெற்றிக்காக ஏனையவர்கள் பாடுபடவேண்டும் இதனால் உறுப்பினர்கள் மத்தியில் ஐக்கிய தன்மையை ஏற்படுவதுடன் மக்களுக்கும் இக்கூட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படும்.
இக்கூட்டமைப்பானது தேர்தலை மாத்திரம் நோக்கமாக்கொண்டு செயல்ப்படாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கவேண்டுமென்பதே எமது ஆவா. அண்ணே மிகவும் வருந்த்தக்க ஒருவிடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் வவுனியா மாவட்டத்தில் தங்கள் கட்சியுறுப்பினர்கள் பலர் தமக்கு வாய்ப்பு கிடகைகவில்லை யென்பதற்காக தமிழ்மக்களின் இன்றைய துயரநிலைக்கு முண்டுகொடுத்த தமிழ்தேசிய கூத்தாடிகளுக்காக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எமது சொந்தங்கள் வழியாக அறியமுடிகின்றது இதுபோன்ற பச்சொந்திகளை இனம்கண்டு தவைமையின் கருத்துக்கு ஏதவாக செயல்படுபவர்களை மாத்திரம் முன்நிறுத்தி செயல்படுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
இக்கூட்டமைப்பை தகர்க்க வேண்டும் என்பதற்காக அரசசார்பு தமிழ் தலைவர்களும் தமிழினவாத சக்திகளும் முனைப்புடன் செயற்படுவதுடன் இதற்கென தனிக்குழு உருவாக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறியாவிட்டாலும் நாங்கள் அறிவோம் எனவேதான் இக்கூட்டமைப்பு உடைந்து விடக்கூடாது என்பதற்காக பலவழிகளிளும் போராடி வருகின்றோம்.
ஐக்கியத் தன்மையும் விட்டுக்கொடுப்புகளும் இல்லாத காரணத்தினால் எமது மக்களுக்கான விடுதலைப் போராட்டம் நழிந்து சிதைவடைந்துள்ளது எனவே கடந்தகால அனுபவங்களைப் பாடமாககொண்டு எதிர்காலத்தை முன்னெடுப்பீர்களென எதிர்ப்பார்க்கின்றோம்.
தேர்தல் வெற்றி தோல்விகளை கனக்கிலெடுக்காமல் தமிழ்மக்களின் மூத்ததலைவர் என்றவகையில் எதிரிகளின் சதிவலையில் எமதினம் சிக்கிவிடாதவகையில் இக்கூட்டமைப்பை வழிநடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் மேற்கூறப்பட்ட யாவும் எனது தனியொருவனின் கருத்தள்ள மத்தியகிழக்கில் வாழும் உண்மையான மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களின் கருத்தாகும் பிழையிருப்பின் மன்னிக்கவும்.. நன்றி
மத்தியகிழக்கிலிருந்து நண்பர்கள் சார்பாக உமாவசந்தன்
http://live.athirady.org/?p=45849
0 விமர்சனங்கள்:
Post a Comment