இதோ “தலைவர்” இன்னுமேன் தாமதம்..??? (வாசகர் ஆக்கம்)
புறப்படு தமிழா புறப்படு புலம்பெயர் தமிழா புத்துணர்சியோடு புறப்படு. முப்பது வருடங்கள் முக்கி முக்கி உழைத்து கொடுத்ததெல்லாம் வீணாகிவிட்ட கவலையிலிருந்து விடுபடு. எமது உடலில் உயிர் ஒட்டி இருக்கும் வரை தமிழீழ கனவு ஓயாது இதோ அந்த கனவு நிஜமாக கனிந்து வரும் காலம் வந்துவிட்டது. இனி நீ ஓய்ந்திருக்கலாகது. தேசியத்தலைவர் கூட இந்த பொறுப்பை புலம் பெயர் தமிழர்களாகிய உங்களிடம் கடந்த 2008ம் ஆண்டு மாவீரர் தினத்திலன்று ஒப்படைத்து விட்டு 2009ம் ஆண்டு மாவீரர் தினத்திற்க்கு தன்னையும் ஒரு மாவீராக்கி சென்று விட்டார். அவர் தந்து விட்டு சென்ற பொறுப்பை நீ தட்டிக் களிக்கலாகுமா? ஆதலால் நீ இன்னும் உத்வேகமாக செயல்பட வேண்டிய நேரமிது. தமிழீழ போராட்ட களத்தில் பல ஆயிரம் மாவீரர்களை இழந்து விட்டோம் வாழ்ந்து முடித்த வயதுகளும் வாழத்துடித்த வயதுகளும் வாழத்தொடங்கிய வயதுகளும் வயது வேறுபாடின்றி வரிசையாய் மடிந்து போனார்கள். இன்னுமா நாம் புலம்பெயர் நாடுகளில் எம் நலம் கருதி வாழ்வது. கூடாது நாங்களும் களம் இறங்கவேண்டும் அதுவும் வயது வேறுபாடின்றி களம் இறங்கவேண்டும்.
எஞ்சி பிழைத்த போராளிகள் கைகாட்டி விட்டார்கள் கே. பி. தான் எமது தலைவரென்று அப்புறம் என்ன தலைவர் தான் கிடைத்தாயிற்றே தாமதிக்க உனக்கு வேறு காரணம் உண்டா? தடைகள் பல உண்டு நாமறிவோம் அதை உடைத்தெறியும் தைரியம் உனக்கு வேண்டும் இழப்புக்கள் இல்லாமல் நாம் எதையும் சாதிக்கமுடியாது தெரிந்துகொள். உலக சூழ்நிலை எமக்கு சாதகமாக இல்லைத்தான் ஆனால் நாம் முயன்றால் முடியாது என்று எதுவுமில்லை. உணவின்றி உண்ணாது நலிந்து வாழும் தமிழீழ உறவுகளால் இனி போராடமுடியாது. உண்டு களைத்த எமது உடல்களுக்குத் தான் அந்த வலிமை உண்டு.
சுகமான வாழ்வுக்கு இது சோதனையான விடயம் தான் இருந்தாலும் எங்கள் தமிழீழ கனவு நிறைவேற வேண்டாமா? இருபது வருடங்கள் ஓடி ஓடி உழைத்து களைத்த உனக்கு இந்த இரண்டு மாத ஓய்வு போதாத என்ன? நாளை முதல் நீ உனக்காக வாழ்வதை மறந்துவிடு. தமிழீழம் கிடைக்கும்வரை அல்லது உன் உயிர் உடலை விட்டு போகும்வரை உனக்கு ஓய்வில்லை என்பதை நினைவில் கொள்.
என்ன புலம்பெயர் தமிழா பயந்து விட்டாயா? களம் என்றதும் போர்க்களம் என்று நினைத்து விட்டாயா? பைத்தியகாரா நீ மறந்தும் கூட தமிழீழ மண்ணை மிதிக்க மாட்டாய் என்று அறியாதவர்களா நாங்கள். நீ இறங்க வேண்டியது களமல்ல வேலைத்தளம் அதுவும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வேலைகளாவது உன் கைவசம் இருக்க வேண்டும். அத்தோடு உன் கிறடிட் வசதிகளை நல்ல நிலையில் பேணி பாதுகாத்துக் கொள். இன்மேல்தான் தமிழீழத்திற்க்கான உன் பங்கு நிறையவே தேவைப்படுகின்றது.
உலக பொருளாதார சூழ்நிலை காரணமாக வேலை வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. அதற்க்காக நீ சும்மா இருந்துவிடமுடியாது. போர்க்களத்தில் போராடி மடிவதை விட இது எவ்வளவு மேல் என்பதை புரிந்துகொள். உன் உழைப்பில் மட்டும் தமிழீழம் பெற்றுவிட முடியாது. உன்னுடைய பெற்றோர்களையும் பிள்ளைகளையும் வயது வேறுபாடின்றி வேலையில் சேர்த்துவிடு. வன்னி போர்களத்தில் இப்படி வயது வேறுபாடின்றி போராடி இறந்து போனவர்களின் மரணத்தை நீ நியாயபடுத்தியவன் தானே. அதைவிட இது ஒன்றும் பெரிய அநியாயம் இல்லைத்தானே.
எங்களுக்கு தெரியும் இந்த பாரிய பங்களிப்பில் நீ பல சந்தோசங்களை இழக்க நேரிடும் என்று எல்லாம் எதற்க்காக நீ விரும்பிய தமிழீழத்திற்க்கு தானே. எனவே தற்காலிகமான சந்தோசங்களை மறந்துவிடு. எனிமேல் உன்மூச்சு நிற்ப்பதனாலால் அது வேலைத்தளத்தில் தான் நிற்க்க வேண்டும் என்பதை தீர்மானமாக கொள். வேலைத்தளத்தில் உயிர் விடுபவர்களுக்கே எனிமேல் மாவீரர் பட்டம் வழங்குவதற்க்கு புதிய தலைவர் கே. பி தீர்மானித்துள்ளார்.
இரண்டு மாதங்களாக வேலையில்லாமல் இருந்த புலி அன்பர்கள் இனி உங்களை நாடி வருவார்கள். அவர்களது இரண்டுமாத இழப்பை உங்களது முதல் பங்களிப்பில் ஈடுசெய்து விடுங்கள். அப்பொழுது தான் அவர்கள் உற்சாகமாக ஓடி ஓடி வருவார்கள். எனிமேல் உனக்கு ஓய்வு இருக்கலாகாது. அப்படி தப்பிதவறி கிடைத்து விட்டால் ஓடிப்போய் ஏதாவது மெயின் றோட்டில் நின்று கத்தவேண்டும். என்ன கத்தவேண்டும் என்பதை நீயாகவே தீர்மானித்து கொள்ளும் சுதந்திரம் உனக்கு உண்டு. உனது புதிய உலகமகா தேசியத்தலைவர் உனக்கான தமிழீழத்தை வெகுவிரைவில் பெற்று தரும்வரை உன் பங்களிப்பு தொடர வேண்டும். தொடர இருக்கும் புதிய தமிழீழம் அத்தியாயம் 5ல் போராளியும் நீயே பங்காளீயும் நீயே.
வெல்க தமிழீழம் எமது புதிய தலைவரின் வழிகாட்டலில்..
புலம் பெயர் தமிழர்களின் தாகம் வேலைத்தளத்தில் மாவீரர் ஆவதே!!
ஆக்கம்.. -மோகன்
http://live.athirady.org/?p=45862
0 விமர்சனங்கள்:
Post a Comment