தமிழர்கள் “வந்தேறு குடிகள்” - மன்னிப்புக் கோரிய அவுஸ்திரேலிய தொலைக்காட்சி
இலங்கைத் தமிழ் மக்களை “வந்தேறு குடிகள்” எனக்கூறிய அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று அவுஸ்திரேலிய வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
ஏ.பி.சி தொலைக்காட்சியே இவ்வாறு மன்னிப்புக் கோரி இருப்பதுடன் தமது ஒளிபரப்புக்காக வருத்ததும் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 18ஆம் நாள் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டவர்கள் என தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழர்கள் மேற்கொண்ட முறைப்பாடு, மற்றும் தெளிவுபடுத்தலைத் தொடர்ந்து. கீரன் டொயில் என்ற இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மன்னிப்புக்கோரியுள்ளார்.
அத்துடன், வரலாற்றை ஆராய்ந்து பார்த்ததில் 2ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஏ.பி.சி தொலைக்காட்சி ஒப்புக்கொண்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment