சீனப்பெண்ணை மதுரை மருமகளாக்கிய யோகா, மொழிகளை கடந்த பயணம்
ஜாதி, மதம், மொழி கடந்து 25 வயது மதுரை இளைஞரையும், 26 வயது சீனப் பெண்ணையும் இணைத்து வைத்திருக்கிறது யோகா. மதுரை திருநகர் அமுதம் திருமண மண்டபம். கொஞ்சும் மழலைத் தமிழில் “வணக்கம்’ என்று வரவேற்கிறார் யுசின் மேய். சீனாவின் குடிமகளாக இருந்த இந்த யோகா டீச்சர், மதுரை மருமகளாக வேண்டும் என்பதற்காக “லட்சுமியாக’ பெயர் மாறி, மதுரையை சேர்ந்த யோகி ராமலிங்கம் மகன் சிவானந்தத்தை நேற்று கரம் பிடித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் யோகா மாஸ்டராக சீனாவிற்கு சென்றேன்.ஒரு நிகழ்ச் சிக்காக குவாங்ஷோங் நகரத்திற்கு சென்றபோது லட்சுமியின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு நம்ம ஊர் சாப்பாடு தான் ஒத்துவரும் என்பதால், நானே சமைத்து சாப்பிட ஆரம் பித்தேன்” என்று கூறும் சிவானந்தம், லட்சுமியை கரம் பிடித்த பின்னணியை கூற ஆரம்பித்தார்.”" சாப்பாடு ஒத்துக்காததால் உடல்நலம் பாதித்தது. அப்போது தான் லட்சுமியின் அன்பு எனக்கு புரிந்தது. நான் எடுத்த வாந்தியை கூட அவர் கைகளால் பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். மொழி தெரியவில்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அன்பை பரிமாற ஆரம்பித்தோம். நான் யோகா மாஸ்டராகவும், லட்சுமி யோகா டீச்சராக இருப்பதாலும் உடல் அசைவால் பேசி, புரிந்து கொண்டோம்” என்று சிரித்தார், சீன மருமகன் சிவானந்தம்.
கணவர் பேசுவதை கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு, தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசவும், புரிந்துக்கொள்ளவும் முடியும். சிவானந்தத்திடம் “ஹே வானி…’ என்று சீன மொழியில் “ஐ லவ் யூ’ பாடிய லட்சுமி, சமஸ்கிருத மந்திரங்களை தங்கு தடையின்றி சொல்வதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். நம்மிடமும் சொல்லிக்காட்டிய அவர், “எப்படி இருக்கு” என்று தமிழில் கேட்டு ஆச்சரியப்படுத்தினார். “பாம்பு, பல்லினு ஒரு கை பார்த்த உங்கள் மனைவி, வாழ வந்த ஊரில் எப்படி சமாளிக்க போறாங்க’ என்று சிவானந்தத்திடம் கேட்டபோது, “அந்த கவலையே இல்லைங்க. நாங்கள் காதலிக்க ஆரம்பித்தவுடன் அவர் சைவத்திற்கு மாறிவிட்டார். அங்கு மசாலா இல்லாமல் தான் சைவ உணவு சாப்பிடுவார்கள். அதேபோல் நம்ம ஊரு கலாசாரம், பண்பாடு எல்லாம் லட்சுமிக்கு அத்துபடி’ என்று மனைவியின் பெருமையை பேச ஆரம்பித்தார்
“எப்படி இரு வீட்டு பெற்றோரையும் சம்மதிக்க வைத்தீர்கள்’ என்று லட்சுமியிடம் கேட்டதற்கு, “எனது மாமனார், மாமியார் என்னை புரிந்து கொண்டனர். இதற்கு யோகாவும் ஒரு காரணம். அதேசமயம் எனது அப்பா பயந்தார். இந்தியாவில் ஜாதி, மத கலவரம் அடிக்கடி ஏற்படுகிறது என்று தயங்கினார். அப்படி இல்லை என்று அவருக்கு தெளிவுபடுத்தி சம்மதம் வாங்கினேன்’ என்ற லட்சுமி, சீனாவில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக கணவருடன் கிளம்ப தயாராகி வருகிறார்.”முடிந்தால் நீங்களும் அங்கே வாங்க’ என்று நமக்கு லட்சுமி அழைப்புவிடுத்தபோது, மதுரைக்காரர்களுக்கே உரிய கலா சார பண்பாடு தெரிந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment