புலிகளின் கொழும்பின் ஆயுத களஞ்சிய, பொறுப்பாளர், புலனாய்வு பிரினர்; மூவர் கைது
கொட்டாஞ்சேனை, கொம்பனி வீதியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொழும்புக்கான ஆயுத களஞ்சியப் பொறுப்பாளரிடமிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் மேலும் பல புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அவ்வியக்கத்தினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் பலவும் கண்டுபிடிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துத் தகவல்களையும் வெளியில் சொல்லிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
கொம்பனி வீதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் 10கிலோகிராம் நிறையுடைய வெடிபொருட்களால் தயாரிக்கப்பட்ட தற்கொலை அங்கியொன்று, தன்னியக்க துப்பாக்கிகள் - 02, துப்பாக்கி 01, பிஸ்டள் - 01, துப்பாக்கி ரவைகள், மற்றும் மேலும் பல வெடிபொருட்கள் போன்றன வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை தலா இரண்டு கிலோகிராம் நிறையுடைய கிளேமோர் குண்டுகள் - 08, காந்தக் குண்டுகள் - 03, உள்ளிட்ட மேலும் பல ஆயுத உபகரணங்கள் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (27) இரவு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை பிரதேசங்களிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நகரில் பாரியதொரு தாக்குதலை நடத்தும் எண்ணத்திலேயே மேற்படி ஆயுத உபகரணங்கள் அனைத்தும் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதல்களில் பிரபல அரசியல் தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனரா? ஏன்பது குறித்தும் இந்தத் திட்டத்துக் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனரா? அவர்கள் தற்போது எங்கு மறைந்துள்ளனர் என்பது குறித்தும் தற்பொது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் மறைந்திருந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபரொருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் மேலும் கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment