புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததையடுத்து தலைவராக செல்வராசா பத்மநாதான் தெரிவு
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவராக செல்வராசா பதமநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலை புலிகளின் தலைமையகம் நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வறிப்பை விடுத்துள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுத்லை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களில் உயிரிழந்ததையடுத்து அவ்வியக்கத்தின் சர்வதேச உறவுகளிற்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அடுத்த தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்ய இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருந்தும் புலம் பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் விசுவாசிகள் எமது தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கின்றார் வெகு விரைவில் வருவார் என்கிறார்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment